பக்கம்:குற்றால வளம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

உலக இயல்பு

 செல்ல விடுதலும் உலக இயல்பிற்கு விரோதமாகும். உலகில் ஒருபுறம் அறவினையும் ஒரு புறம் மறவினையும் நிகழ்ந்துகொண்டே செல்லும். ஒரு காலத்தில் அறவினை மேலோங்கி யிருக்கும்; ஒரு காலத்தில் மறவினை மேலோங்கி, நிற்கும். உலகத்தில் அறவோருக்கும் மறவோருக்கும் என்றும் பூசல்தான். அறவோர் அறத்தை ஆக்கவும் மறவோர் மறத்தை வளர்க்கவும் முந்துதல் இயல்பு. இப்பூசலை அறவே தொலைக்க ஒருநாளும் ஒண்ணாது. ஆனால் அதன் பொருட்டு இச்சண்டையை விட்டொழித்து விடுதல் ஆகாது. எவர் ஒய்ந்தாரோ அவர் கொள்கை பெரிதும் தாழ்ந்துவிடும், மறவோர் ஓய்ந்தால் நல்லதுதான். அவர் ஒயப் போவதில்லே. அது செய்ய எவர் தூண்டுதலும் இன்றியே பல்லோர் புறப்படுதல் கண்கூடு. அறவினையாளரைப் பெருக்க அறவோர் பெரிதும் முயல வேண்டுவது கடமை.


அறவோர் அறத்தை விடாது ஆற்றிக் கொண்டே செல்லுதல் வேண்டும். எத்துணை காலம் போரிட்டபோதிலும் பகையை அறவே தொலைத்தல் இல்லையானால் இப்பூசல் எற்றுக்கு என எண்ணுதல் ஆகாது. என்றும் அறத்திற்கே வெற்றியுண்டாகுமாறு அமர் விளைத்தல் அவசியம். இவ்வமர் ஓயாது நடந்து கொண்டுதான் இருக்கும். அது உலக இயல்பு. கடல் அலைக்கு எவ்வாறு ஒரு கணமும் ஓய்வில்லையோ அதுபோலவே அறப்போருக்கும் ஒய்வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/29&oldid=1293333" இலிருந்து மீள்விக்கப்பட்டது