பக்கம்:குற்றால வளம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

23


செய்துவந்தால் உரம்பெறும். தேய்வு மிகுதியேற்படுங்கால் அதனைப் புதுக்குதல் வேண்டும். என்றும் விடாது அறஞ்செய்து கிடத்தலை மேற்கொண்டாலன்றி அறம் ஓங்கிவளர்தல், அருமை. உயர் மக்கட்கு அறஞ்செய்து கிடத்தலே என்றும் கடனன்றி வேறு கடனின்று.ஒரு காலத்தில் முடிவு கட்டிய ஒன்று அப்படியே நிற்காது என்பதற்குச் சில சான்று காட்டுதும்.


இந் நாள் இந்நாட்டில் வகுப்புப்பற்றிப் பல திறப்பட்ட கருத்துக்கள் தோன்றியிருக்கின்றதன்றோ? கடவுள் மக்களைப் படைக்கும் பொழுது அந்தணர் என ஒரு கூட்டத்தாரையும் அரசர் என மற்றொரு பிரிவாரையும் வணிகர் எனவேறொரு சாராரையும் வேளாளர் என இன்னொரு பகுதியாரையும் படைத்தாரெனவும் அவர் வழித்தோன்றல்களெல்லாம். அவ்வவ் வகுப்புக்குரியாரெனவுங் கொள்ளும் கொள்கையைப் பெரும்பாலானவர்களிடம் காண்கின்றோம். இதனை ஆராய்ச்சியாளர் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை இதுபற்றி இக் கட்டுரையில் விரித்தெழுத விரும்பவில்லை. வகுப்பு நீர்மையை மற்றொரு கட்டுரையில் காணலாம். "முதலில் மக்களெல்லாம் ஜாதிப் பிரிவென்பது இல்லாமல் ஒன்றாகவே வாழ்ந்தார்கள்; இடைக்காலத்தில் சில நலங்கருதிக் தொழில்பற்றி வகுப்பாப் பிரிக்கப்பெற்றார்கள்" என்பதே அறிஞர் கொள்கை, இப்பிரிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/32&oldid=1293337" இலிருந்து மீள்விக்கப்பட்டது