பக்கம்:குற்றால வளம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

நல்லன நாடல்



நல்லன நாடல்

மக்கள் யாக்கைபடைக்கப்பட்டதன் நோக்கம் நல்லன நாடுவதற்கேயாகும். யாண்டு நல்லன. இருக்கபோதினும் அவற்றை நாடிப் பெற்றுக்கொள்ள முயல வேண்டுவது மக்கள் கடன். "கடனென்ப நல்லவை யெல்லாம்" என்றருளினார். உலகெலாம் போற்றும் ஒரு பெரும் புலவர். நல்லன யாண்டு யாண்டு உளவோ ஆண்டியாண்டு நுழைந்து அவற்றை நாடிக் கடனாகக் கொள்ளுதல் வேண்டும். நல்லவை இருக்குமிடம், உயர்ந்ததா தாழ்ந்ததா; நம்நாடா பிற நாடா; நம் சமயமா பிற சமயமா; என்பனவற்றை யாய்ந்து, அவை உயர்ந்த இடத்திலிருக்காற்றான் நம் நாட்டிலிருந்தாற்றான் நம் சமயத்திலிருந்தாற்றான் கொள்ள வேண்டுமென்பதும். இவற்றிற்கு எதிரிடையானால் தள்ளவேண்டுமென்பதும் இல்லை. நோக்கம் நல்லவை ஒன்றிலேயே இருக்க வேண்டுமன்றிப் பிற சாதனங்களில் இருத்தல் ஆகாது?. கள்ளருந்தும் ஒருவனிடத்து நல்லதொன்றிருக்குமானால் அந்நல்லதை ஏன் கொள்தல் ஆகாது? பிற நாட்டில் நல்லன. இருக்குமானால் அவற்றைக் கொள்வதில் என்ன தப்பிதம்? பிற சமயங்கள் கூறும் நல்லொழுக்கங்களை யெல்லாம் ஏன் கையாளுதல் படாது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/35&oldid=1534945" இலிருந்து மீள்விக்கப்பட்டது