பக்கம்:குற்றால வளம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

27

 கருத்து நல்லன. நாடுதலிலேயே பதிதல் வேண்டும். "நல்லன யாவையும் நாடுறு நாடு” என்று நமது நாட்டை அலங்கரித்துக் கூறினார் நல்லிசைப் புலவர். அந்நாட்டம் மெய்யாக நம் நாட்டவர்க்குச் செயலில் வருதல் வேண்டுமென்பதே எனது பெரு விருப்பம்: இவை நல்லன. இவை தீயனவெனப் பொருள்களை ஆராய்ந்து அறிவு கொண்டு காண்டல் வேண்டும். ஒவ்வொன்றையும் பொறுமையோடு ஆய்தல் வேண்டும். ஆராயாமல் எந்தப் பொருள்பற்றியும் திடமான முடிவு கொள்தல் படாது. ஆராய்ச்சி யின்றிப் பரம்பரை வழக்கமாகவோ பிறர் கொள்கை கருதியோ எதினும் உறுதி பூணுதல் நன்றன்று. அவ்வாறு கொள்வோர்க்கு உண்மை புலப்படாது. நடை முறையில் பலரைப் பார்க்கின்றோம். எதையேனும் சரியாகவோ தவறுகவோ மெய்யென நம்பி விடுகின்றார்கள்; அப் பொருளின் தன்மையை யாரும் விளக்கினால் காது கொடுத்துக் கேட்கவும் அஞ்சுகின்றார்கள்; அவற்றை உளத்தில் வாங்குகின்றாரில்லை; ஆராய்கின்றாரில்லை; தாம் சிறிதும் ஆராயாமல் உறுதிபூண்டிருக்கும் அக் கொள்கையை ஆராய்ச்சியோடு மறுப்பாரைக் காய்கின்றார்; அவரைச் சீறுகின்றார்; அதைப்பற்றிச் சிந்திக்கவே ஒருப்படுகின்றாரில்லர்; இறுதிவரை நன்மை தீமையறிந்து கொள்ளாராகி விடுகின்றார். அந்நிலையுள்ளார் பலர் வாழ்கின்றார் நம்பெரு நாட்டில், அவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/36&oldid=1293946" இலிருந்து மீள்விக்கப்பட்டது