பக்கம்:குற்றால வளம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

நல்லன நாடல்

 யெல்லாம் நோக்கி இறைவன் கொடுத்த பகுத்தறிவை நடைமுறையில் கையாண்டு தம்மறிவால் நல்லனகண்டு ஒழுகவேண்டுமென்று பன்முறையும் வேண்டுவோம்.


எவர், தங்கருத்துக்கு மாறாக என்ன கூறின போதினும் ஏன்? அதனால் என்ன முழுகிப் போகும்? எவர் எதைக் கூறியபோதினும் அமைதியாகக் கேட்கலாம்; ஆராயலாம்; நல்லன உளவேல் கொள்ளலாம். இவ் உயர் கருத்து நம் நாட்ட்வர்க்கு அரும்புதல் வேண்டும். நம் நாட்டில் புராணங்கள் மிகப் பல இருக்கின்றன. அவற்றைப்படித்த அன்பர்களுள் ஒரு பகுதியார் அக் கூற்றை அன்புடன் வரவேற்பார்கள். மற்றொரு பகுதியார் அதன்மீது சீறி விழுகின்றார்கள். நம் நாட்டவரோடு பழகிய தன்மைகொண்டு கான் அவ்வாறு கூறுகிறேன். இருகூட்டத்தாரும் குருட்டுப் பிடியாக ஒன்றைப் பிடித்துக் கொண்டு, அதற்கு மாறு பட்டுக்கூறும் கருத்துக்களைக் காரணங் கூறாது மூலை முடுக்குகளில் வெறுத்துப் பேசி வருவதையே கடனாகக் கொண்டொழுகுகின்றார். அது பெருந்தவறு. நான் பலப்பல புராணங்களைப் படித்திருக்கின்றேன். புராணங்களில் நல்லன பல உள. அவற்றை நாம் எடுத்துக் கொள்ளச் சிறிதும் தயங்கலாகாது. நல்லன. யாண்டிருந்தபோதிலும், கொள்தல் கடமை யன்றோ? அதுபோல் தீயன எங்கிருந்த போதிலும் தள்ளுதலும் கடனே. நமக்குச் செயலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/37&oldid=1295339" இலிருந்து மீள்விக்கப்பட்டது