பக்கம்:குற்றால வளம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

29

 லேயே குறி. எவ்வளவு உயர்ந்த ஒருவரெனினும் அவர் கூறுவது தவறானால் அதை தள்ள நான் ஒரு நொடியும் தாழ்த்தப் போவதில்லை அவ்வாறே தாழ்ந்த நீர்மை வாய்ந்த ஒருவர் உரைக்கும் நலனைக் கொள்ளவும் பின்வாங்கப் போவதில்லை.


நல்லன யாண்டிருந்த போதினும் கொள்தல் என்ற முறையில் புராணங்களிலிருக்கும் நல்லனவற்றைக் கொள்ள ஏன் அஞ்ச வேண்டும்? புராணங்களில் உயர்க்க அறங்கள் பலவுள; உயர்க்க கருத்துக்கள் பலவுள; உயர்ந்த கதைப்போக்குகளும் பலவுள. அவற்றை நாம் பொன்போற் போற்றி ஏற்போம். ஏன்? நல்லனநாடல் கடனன்றோ? புராணங்களிலுள்ள தீமைகளை யெல்லாம் கொள்ளக்கூடாது புராணங்களில் தீமை பயப்பவைகள் பலவுள. புராணங்களிலுள்ள கெட்ட கதைகளை யெல்லாம் நாம் சிறிதும் கொள்ளலாகாது. அவ்வாறு கொள்வோரை அறிவற்றவர் என்று கொஞ்சமும் கூசாது கூறலாம் ஒழுக்கங்கொல்லும் கதை புராணங்களில் மலிவு. அவைகளை மெய்யென நம்புதல் மக்கள் ஒழுக்கத்திற்குப் பெருந்தீங்கு பயக்கும். ஒழுக்கங்கொல்லும் நெறி யாண்டிருந்த போதினும் அதைவோறுத்தல் அறிஞர் கடன். புராணங்கள் முழுமையும் உள்ளவாறே நிலை பெற வேண்டுமென்று கருதி, அவைகளை முற்றும் ஏற்பார் ஒழுக்க நெறியை மாய்ப்பவரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/38&oldid=1295347" இலிருந்து மீள்விக்கப்பட்டது