பக்கம்:குற்றால வளம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

31

 வேண்டுவதே அறிஞர் கடன். நமக்குப் புராணம் பாடிய எவரும் பகைஞரல்லர். அவ்வாசிரியர்களை அவர்கள்கூறும் நல்லனகொண்டு நாம் பெரிதும் மதிக்கின்றோம். புராண ஆசிரியர்களுள் பெரும்புலமை கொண்டார் பலர் உளர். அவர் புலமையை நாம் போற்றாதிருக்கமுடியுமா? கம்பநாடரின் அருங்கருத்துக்களையும், அழகிய கவிகளையும், சேக்கிழாரின் சிறந்த பாடல்களையும், பரஞ்சோதி முனிவரின் பலதுறை வன்மையையும், புகழேந்தியின் இனிய வெண்பாவையும், அதிவீர ராமனின் அகன்ற வர்ணனையையும், வேறு பலரின் மேலான செய்யுட்களையும் எல்லோரும் கற்றல் வேண்டும். அவற்றின் கட்பொதிந்து கிடக்கும் நல்லன எல்லாவற்றையும் கைக்கொண்டொழுகுதல் வேண்டும்.


நல்லன யாண்டிருந்த போதினும் கொள்ளப் பின் வாங்குதல் ஆகாது. சிலர் ஆட்களையே நோக்குகின்றனர். அது பெரியதோர் மூடத்தனம். நல்லவை எங்கிருந்தாலும் உடனே பற்றுதல் வேண்டும். நல்லவை எவை யென்பவற்றை ஆராயும் அறிவுபெற்றவர்தாம் மக்கள் என்பது அறிஞர் பலரும் கண்ட உண்மை. எனவே, மக்களாவார் கல்லவை அறியமுடிய வில்லையே என்று நவிலமாட்டார். நம் நாட்டவர் காலங் கற்பிக்க முடியாத நிலைமையில் பன்னெடு நாட்களாக மிகவும் நாகரிகம் வாய்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றனரேயன்றி, செயலில் இந்நாள் அநேகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/40&oldid=1295362" இலிருந்து மீள்விக்கப்பட்டது