பக்கம்:குற்றால வளம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

35

 அறிவை ஆளும் ஆற்றலற்று ஒருவகையாகக் கற்பதில் காலங்கழித்து வருகிறார்.


அறிவைப் பயன்படுத்திக் கொள்ளாமலேயே கல்வி பயில்வார் கணக்கு மிகப் பெருக்கம். நூல்கள் நுவல்வனவற்றை அவை கூறுமாறு கற்றுக்கொள்கிறார்; பிறர் கூறும் பிற பொருள்களையும் பிறர் செய்யுஞ் செயல்களையும் அப்படியப்படியே படித்துக்கொள்கிறார், அவைகளை அறிவதில் தம் அறிவைப் பெரிதும் உபயேர்கிட் பதில்லை. "தனக்கென அனைவர்க்கும் தனித்தனியே அறிவு உண்டு; எந்த நூல் என்ன கூறினும் எவர் எது இயம்பினும் எல்லாவற்றையும் எடுத்து ஆராய, அவர் எவருக்கும் குறையாத உரிமை எல்லோர்க்கும் உண்டு" என்ற எண்ணம் பலர்க்கு இன்மையினாலேயே கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது, என இயம்புகின்றேனன்றி வேறன்று.


அறிவை இயற்கையறிவு செயற்கையறிவு எனவும் இரண்டாகப் பிரிக்கலாம். அவற்றுள் இயற்கையறிவு என்பது இயல்பாக இருப்பது; செயற்கையறிவு என்பது சேகரித்துக் கொள்வது. இரண்டு அறிவும் கொள்ளத் தக்கனவே. இயற்கையறிவு இல்லாதார் எவருமில்லை. அது 'எல்லோர்க்கும் உண்டு. அதில் குறைவு மிகுதியிருக்கிறது. ஆனால் பலர் அடியோடு அவ்வறிவு இல்லா நிலையில் கருமம் ஆற்றுகின்றனர். அதனை ஆள வகையறிகின்றாரில்லை. செயற்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/44&oldid=1296642" இலிருந்து மீள்விக்கப்பட்டது