பக்கம்:குற்றால வளம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

37

 யாகும். இயற்கையறிவே பகுத்தறிவு என்று கூறுகின்ற ஆறாதறிவு எனக் கொள்ளலாம். கல்வியும் அறிவும் என்று இக் கட்டுரைத் தலைப்பில் நான் குறித்தது அவ்வியற்கை யறிவையேயாகும். அறிவு என்ற சிறப்பிற்குரியது அவ்வறிவே என்பதை எவரே மறுக்க வல்லார்? அவ்வறிவிற்கும் கல்விக்குமே தொடர்பு இல்லாமல் இருக்கிறது இந்நாள் என்பது பலர் கருத்து. அவ்வுண்மையைச் சில சான்றுகளோடு விளக்குவேன்.


அறிவை, ஆளுவதைக் கைவிட்ட நாள் முதல் நம் நாடு இத் துணைத் தாழ்ந்த நிலைக்கு வந்தது என்று இயம்புதல் தவறாகாது. இந் நாள் நம் நாட்டைவிடப் பிற பல நாடுகள் இதில் மேம்பாடுற்றிருக்கின்றன. நம் நாட்டில் அறிவுக்குச் சம்ப்ந்தமில்லாத பெரு மூடக் கொள்கைகளே. பெருகிவிட்டன. கல்லாது வாளா நீண்டவர் மட்டும் அறிவை ஆளவில்லை என்று கூறமுடியவில்லை. கற்றாருள்ளும் அறிவை ஆளாதாரே பலர். சிறிது கூர்ந்து நோக்கின் இவ்வுண்மையை எவரே உணரார்?


தமிழ் நூல்களில் ஒன்று பாக்கிவிடாது ஒருவர் உருப்போட்டிருக்கிறார். எந்தப் பாட்டுக் கேட்டாலும் பாராமல் ஒப்பிப்பார். நீண்ட பெரிய உரை நடைகளைக் கூட முற்றும் ஒரு எழுத்துக்கூட மாறாமல் மனப்பாடமாகக் கூறுகிறார். அந்தாதிகள், கலம்பகங்கள், கோவைகள் எல்லாம் அடுக்கடுக்காக அறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/46&oldid=1296715" இலிருந்து மீள்விக்கப்பட்டது