பக்கம்:குற்றால வளம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை



இந்நூல், குற்றால வளம் என்ற கட்டுரையை முதலாகக்கொண்டு பதினான்கு கட்டுரைகள் பெற்ற ஒரு தொகுப்பு நூல். முதற் கட்டுரையின் பெயரை நூலுக்குக் கொடுத்தல் ஓர் மரபு. இக்கட்டுரைகள் இவ்வாண்டில் எழுதப்பட்டனவல்ல. இருபதாண்டுகட்கு முன் எழுதப்பெற்றவை. எனவே காலத்தால் முற்பட்டவையைப் பாராட்டுவதாயின் அவ்வகையில் இக்கட்டுரைகளைப் பாராட்டுக! அல்லாமல் தகுதிகொண்டு நோக்குவதாயினும் படித்துப் பார்த்து முடிவு கட்டுக!

பெரும்பாலாக நீதிபற்றிக் கூறும் இக்கட்டுரைகள் முன்னர் "ஊழியன்" பத்திரிகையில் வெளிவந்தவை. அக்காலத்துக்கும் இக்கட்டுரைகள் பொருந்துவனவே. ஆகலின் எனது அரிய நண்பர் பாலுவின் விருப்பத்திற்கேற்ப கட்டுரைகள் நூல் வடிவமாக வெளிவருகின்றன. கட்டுரைகளின் பெருமை சிறுமைகளை நான் சொல்லக் கூடாதல்லவா? அன்பர்கள் தீர்மானிக்க!


அமராவதி புதூர்,
26-3-47

ராய.சொ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/5&oldid=1301338" இலிருந்து மீள்விக்கப்பட்டது