பக்கம்:குற்றால வளம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

41

நிலையிலா வாழ்வு

உலகில் அறம் குறைந்து வருவதையும் மறம் நிறைந்து வருவதையும் நாள்தோறும் கண்டு வருகிறோம். அறஞ் செய்வார் சிலராக வும் மறஞ்செய்வார் பலராகவும் இருக்கின்றார். காரணம் என்ன? நிலையிலா வாழ்வை உணரா மக்கள் மல்கியமையேயாகும். வாழ்வின் நிலையான்மையை உணர்வார்களானால் மறஞ்செயப் புகாரன்றோ? வாழ்வு என்றும் நிலைபெறுவது என்றெண்ணியன்றோ தங்கள் வாழ்வின் பொருட்டு மறம் புரியப் பின்வாங்குகின்றாரில்லை? உலகில் மிகப் பெரும்பாலான மக்கள் இதனை உணராமலே கருமமாற்றுகிறார். இது வியக்கத்தக்க ஒன்றே, வாழ்வு நிலையாமை யுடையது என்பதற்குப் பழைய பனுவற் சான்றுகள் வேண்டுமானால் கணக்கிலடங்காச் சான்றுகள் உள. நடைமுறையில் காணவேண்டுமானால் நாள்தோறும் தவறாது ஒவ்வொருவரும் கண்டு கண்டு வருகின்றனர். இவ்வளவு விளக்கமாகப் பல்லாற்றானும் அறியக்கிடக்கும் நிலையாமையுடைய வாழ்வை நிலையின தென்றெண்ணுதல் வியப்பென்பதில் என்னே தடை ? நிலையிலாதவற்றை நிலையுடையவை என்றெண்ணுதல் கீழான செயல் என்னும் பொருள்பட "நில்லாதவற்றை நிலையின வென்றுணரும் புல்லறிவாண்மை கடை" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/50&oldid=1301378" இலிருந்து மீள்விக்கப்பட்டது