பக்கம்:குற்றால வளம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நிலையிலா வாழ்வு

 அருளினார் வள்ளுவனார். அப்புல்லறிவாண்மை தான் இந்நாள் உலகில் மல்கியிருக்கிறது.


எவற்றினால் மக்கள் பெருமிதம் அடைகின்றார்களோ அவையனைத்தும் நிலையாமையுடையனவாகவே யிருக்கின்றன. பொருள் நனிபடைத்த ஒருவர் அப்பொருளுடை வாழ்வை மிகப் பெரு வாழ்வாகக் கருதுகின்றார். அதனால், தீமையின்றேல் அவர் கருதுவதாலும் பாதகமில்லை. அக்கருத்துப் பிறருக்குப் பெரிய இடுக்கணை விளைவிக்கின்றது. படைத்த பொருளோடு தாம் என்றும் வாழ்தல் நிலையென நிச்சயித்து இறுமாந்து செய்வது தவிர்வது தெரியாமல் உலகில் பெரும் பாலாராகிய ஏழை மக்களை இயன்றமட்டும் துன்புறுத்திவிடுகிறார், வள்ளுவர் அருளிய மற்றை அறங்கட்கும் தற்கால அரசியலுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாது போயினும், "பொருளிலார்க் கிவ்வுலகமில்லை" என்ற, ஒன்றிற்குப் பெரிதும் இயையவே அரசியலாதியயாவும் நடைபெறுகின்றனவாகலின் ஏழை மக்கள் இன்னல் அதிகப்படுகின்றனவேயன்றி இவ்வுலகில் யாண்டும் குறைவுறக் காணவில்லை, ஏழைகட்குப் பரிகாரம் அறக் கடவுள் செய்தாலொழிய இல்லை. செல்வச் செருக்குற்றுத் தீமை புரிவோரை அறக்கடவுள் காயுமென்ற மேலோர் கொள்கை உண்மை. நிலையிலாப் பொருளை நிலையினதாக வெண்ணி மயங்கி; பிறருக்கு ஆனமுட்டும் துன்பத்தையாற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/51&oldid=1302954" இலிருந்து மீள்விக்கப்பட்டது