பக்கம்:குற்றால வளம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

43


"பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக் கின்னா, பிற்பகற் றானே வரும்" என்பதற் கொப்பப் பின்னர் துன்பத்தை ஏற்று ஏன் அழிதல் வேண்டும் ?


எல்லா மக்களும் இன்ப வாழ்வு வாழ வேண்டுமானால், ஒருவருக்கொருவர் துன்பஞ் செய்தல் ஆகாது. செல்வர் எழைகட்குத் துன்பஞ்செய்தல் இயல்பாகிவிட்டது. அதனை அவர்கள் நிறுத்தவேண்டுமானால், செல்வம் நிலையற்றது என்பதை உணரவேண்டும். செல்வர் வறியரைத் துன்புறுத்துதல் ஒழியவேண்டுமென்பதற்காகச் செல்வம் நிலையற்றது என்று நான் கூறவில்லை. செல்வம் நிலையற்றது என்பதற்கும். பிற வாழ்வு நிலையற்றது என்பதற்கும் நூற்சான்று எண்ணற்றன. உள. அற நூல்களை எடுத்துப் பார்ப்போமானால் ஒவ்வொரு நல்லற நூலினும் நிலையாமைக்கு அதிகாரங்களுள. "நாலு இரண்டு” எனப் புகழ்பெற்ற இரண்டு அற நூல்களுள் ஒன்றாகிய நாலடியார், நூலாரம்பத்திலேயே "செல்வநிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை' என்று மூன்று அதிகாரங்களை முழக்கிப் பிறவற்றைப் பின்னே பேசிச் செல்கின்றது; மற்றொன்றாகிய திருக்குறள், "நிலையாமை” என்ற ஓர் அதிகாரத்தில் செல்வம் யாக்கை இளமை யாதியவற்றின் நிலையாமையைத் திறம்படச் செப்பியிருக்கின்றது. பிற பல நூல்களினும் நிலையாமைபற்றிப் பலப் பல பாக்கள் கிடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/52&oldid=1302959" இலிருந்து மீள்விக்கப்பட்டது