பக்கம்:குற்றால வளம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

நிலையிலா வாழ்வு



னர். ஆனால், அதனை அழுத்த மனதில் பதிக்கின்றாரில்லை. யாக்கை நிலையுடையதானால் இது வ்ரை உலகில் தோன்றிய எல்லோரும் அவ்வவ் யாக்கையோ டிருப்பாரன்றோ? பிறந்த அனைவரும் மாளுவது உறுதி. முன்னே பிறந்திருக்க பல்லோர் மாண்டனர். யாக்கை நிலையாமையில் செல்வர் வறிஞர் கிடையாது. "முடிசார்ந்த மன்னவரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு பிடிசாம்பலாவது” திண்ணம். "மண்ணாண்ட மன்னரும் அவர் தனமும் மாண்டன. நுண் மணலை யொக்கும்; விண்ணாடும் இந்திரரும் அவர் தனமும் பொயின விண்மீனை யொக்கும்” 'நேற்றிருந்தார் இன்று வெந்து நீறா"வதை எவரே யறியார்?" நெருநலுள னொருவன் இன்றல்லை யென்னும் பெருமையுடைத்து இவ்வுலகு" என்றார் வள்ளுவர். “இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பரென் றெண்ணவோ திடமில்லையே” என்றார் தாயுமானார், "மலை மிசைத் தோன்றும் மதியம்போல் யானைக், தலைமிசைக்கொண்ட குடையர்-நிலமிசைக், துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்டால்லால், எஞ்சினார் இவ்வுலகத்தில்." "சென்றே யெறிய வொருகால் சிறுவரை, நின்றேயெறிய பறையினை-நன்றேகாண், முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர், செத்தாரைச் சாவார் சுமத்து" என்று நாலடியார் நுவல்கின்றது. இவற்றை அநுபவத்தில் கண்டும் மக்கள் உணர்ந்து ஏற்பவொழுகாதது பழ வினையினாற்போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/55&oldid=1303467" இலிருந்து மீள்விக்கப்பட்டது