பக்கம்:குற்றால வளம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

51

 வளவு விளக்கம் பெற்றார்கள்? அடக்க முடைமையினாலேயே; உடல் உரை உளம் மூன்றும் அடக்கிய தன்மையினாலேயே. மூன்றையும் அடக்கியவரே தீமையி னின்றும் நீங்கியவர். மூன்றையும் அடக்காவிடில் பிறவிப்பேறேது? குறள் அடக்கமுடைமை பத்துச் செய்யுளில் முதலைந்து செய்யுளில் பொதுவாக அடக்க முடைமைப் பற்றிக் கூறினார்.

அவ்வைந்தில் கடைசிப் பாட்டில் செல்வர்க்கு அடக்கம் இன்றிமையாதது என்பது கூறப்படுகிறது. அக்குறள் வருமாறு:- "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளுஞ்செல் வர்க்கே செல்வந் தகைத்து" ஏனிவ்வாறு செல்வரை வேறுபடுத்திக் கூறினாரென்றால் செல்வர்க்கு அடக்கம் வருதல் அருமை என்பது கருதியே. பெரும்பான்மையாக மக்களைத் தீ நெறிச் செலுத்துவது செல்வமே யாகும். அஃதில்லார் அனைவரும் அடக்கமுடையார் என்பது கருத்தன்று. எல்லாருள்ளும் அடங்கா ருளர்.ஆனால் அடக்கம்பெறாது துணிந்துதீயன புரியத் தூண்டுவது பெரும்பாலும் செல்வமே யாகும். ஆதலாற்றான் வேறுபடுத்தி மற்றையோரைக் காட்டினும் செல்வர் அடக்கமுடைமையைக் கட்டாயம் கொள்ள வேண்டுமென்று கூறுவாராயினார். பணமிருந்தால் எதுவும் செய்யலாமெனப் பல மேதாவிகள் பகர்கின்றாரல்லவா? ஆதலாற்றான் அவரடங்குதல் மிகச். சிறப்பு என்று அறைந்தார் ஆசிரியர் திரு வள்ளுவனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/60&oldid=1304729" இலிருந்து மீள்விக்கப்பட்டது