பக்கம்:குற்றால வளம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அடக்கம்

 அடக்க முடைமை அதிகாரத்தின் பின் ஐந்து பாக்களில் ஒரு பாவில் மெய்யடக்கமும் மற்றொரு பாவில் மனவடக்கமும் மூன்று பாக்களில் மொழி யடக்கமும் கூறப்பெற்றுள்ளன். மெய்யடக்கமாவது உடலடக்கம். அது முதலிற் கொள்ள வேண்டுவது. உடல் வாழ வன்றோ, மெய் வாய் கண் மூக்குச் செவி எனப் பெயர்பெற்ற ஐவாய வேட்கை அவா வினாலன்றோ செய்வன தவிர்வன தெரியாமல் மக்கள் வினையாற்றி விடுகிறார். ஆகலின் ஐம் பொறிகளையும் அவற்றின் இச்சைபோல் செல்லவிடாமல் அடக்குதல் வேண்டும். அவற்றிற்கு ஆட்படாது மொழியையும் உளத்தையும் அடக்குதல் வேண்டும். "ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து” என்னும் குறள் மெய்யடக்கம் கூறிற்று. “கதங்காத்துக் கற்றடங்க லாற்று வான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றி னுழைத்து” என்னும் குறள் மன அடக்கம் நுதலிற்று. பொறிகளை அடக்கி நிறுத்திய வழி மனவடக்கமும் பெற்றே தீர்தல் வேண்டும். இன்றேல் மனம் தீயனவற்றை நாடிக் கொண்டே யிருக்கும். செயலுக்கு வராவிட்டாலும் மனத்தினால் தீயன எண்ணுதலும் தவறே யாகும். மனம் அடங்காவழித் தீய எண்ணம்போகாது. "சினமடக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனமடக்கக் கல்லார்க்கு வாயேன் பராபாமே" என்றார் தாயுமானப் பெரியார். மனஞ்செயுங் கொடுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/61&oldid=1304734" இலிருந்து மீள்விக்கப்பட்டது