பக்கம்:குற்றால வளம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

53

 எண்ணி முடியாது; எழுதியாகாது. அதைப் பற்றிப் பல பெரியோர்கள் பலப்பல சாற்றியிருக்கின்றார்கள். திருவருள் விளக்க வள்ளலா ரென்று பெயர் விளங்கிய அருட்பாக்கள் அருளிய இராமலிங்க அடிகள் செய்யுள் ஒன்றை ஈண்டுத் தருதும்.


"மனமான வொருசிறுவன் மதியான குருவையு மதித்திடா னின்னடிச்சீர் மகிழ்கல்வி கற்றிடான் சும்மாவிரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான், சினமான வெஞ்சுரத் துழலுவ னுலோபமாஞ் சிறுகுகையி னூடுபுகுவான் செறுமோக இருளிடைச் செல்குவான் மதமெனுஞ் செய்குன்றி லேறிவிழுவான், இன மான மாச்சர்ய வெங்குழியினுள்ளே இறங்குவான் சிறிதுமங்தோ என்சொல் கேளானெனது கைப்படான் மற்றிதற் கேழையே னென் செய்குவேன், தனநீடு சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே தண் முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண் முகத் தெய்வ மணியே"


மனம்பற்றிப் பேரெழிற் புலவர் சுப்பிரமணிய பாரதியார் மொழிந்த ஒரு வீரப்பாட்டையும் கீழே வரைகின்றேன்.

பேயா உழலுஞ் சிறுமனமே
பேணாய் என் சொல் இன்று முதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தருமம் எனயான் குறிப்பதிலும்
ஒயா தேநின் றுழைத்திடுதி
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/62&oldid=1304744" இலிருந்து மீள்விக்கப்பட்டது