பக்கம்:குற்றால வளம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அழுக்காறாமை

 வேறுபாடேது ? கழுதை குங்கும மூட்டைகளைச் சுமந்து செல்கிறது! அவ்வுயர்ந்த பொருளின் தன்மையை அது அறிகின்றதோ? பேய் பொருளைக் காக்கின்றது; அதன் பயனை அது அடைய முடியுமோ? மனிதன் பல நூல்களை அறிந்து கொண்டிருக்கிறான். அதன்படி யொழுகாவிட்டால் அவன் பயின்றதால் ஆம்பயனென் ? கற்றபடி யொழுகுவோரே மேலோர். அறநூல்களை நன்கு கற்றல் வேண்டும். அதன்படி நடத்தல் வேண்டும். அங்ஙனமால் அழுக்காறு முதலிய பாவிகள் வந்து அணுகமாட்டார்கள். நறுங் குணங்களும் பல செல்வங்களும் படைத்திருத்தும் அழுக்காற்றினால் அழிந்தார் எண்ணற்றார் உளர். அழுக்காறென வொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்தற்குச் சான்றாக நம் நாட்டிடைப் பல காதைகள் உள. துரியோதனன் என்ற விழுமிய செல்வம் படைத்த வணங்காமுடி மன்னனைப் பாரத நாட்டார் நன்றாக அறிவர். அவனுடைய பெருங் திருவும் பேரரசும் எதனால் அழிந்தன? அழுக்காற்றினாலல்லவா? பாரதம் படிக்கும் அன்பர்கட்கு இதனை விளக்கி நான் பகரவும்வேண்டுமோ? தொடக்கம்முதல் பாண்டவர் ஆக்கம் கண்டு பொறாத துரியோதனன் வாழ்வு துறந்து போர்க்களம் பட்டான்; அழுக்காறறியா அறத்தின் மகன், அவனியைத் தனி யாண்டு அழியாப் புகழ் படைத்தான்.


"கொல்லாாக் கொடியோன் கொடுங் தொழிற் கூட்டக் கூடியே குலவியுங் கொடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/69&oldid=1309266" இலிருந்து மீள்விக்கப்பட்டது