பக்கம்:குற்றால வளம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால் வளம்

61

யால் நல்லிசை யடைந்த அங்கர்கோன்” பாண்டவர்பால் அழுக்காற்றைப் பெரிதும் கொண்டுறைந்தான். ஆதலினால் பெரு வள்ளன்மை வாய்ந்த அவன் "கொடையுடைக் கொடிய பாவி" "புறஞ் சுவர்க்கோலஞ் செய்வான்" என்று அழைக்கப்படுகிறான். பொறாமையினால் அழிந்தோரைப்பற்றி நமது நூல்கள் கூறுவனவற்றையெல்லாம் ஈண்டுக் கொணர்ந்தால் மிக விரிந்துவிடும். பொறாமையினால் அழிந்தவர்க்குச் சான்று துரியோதனன் ஒருவனே சாலுமே, வணங்கா முடி மன்னன்-வேந்தர் வேந்தன்-பெருஞ் செல்வம் படைத்தோன்பெருநிலம் ஆண்டோன்-தானைக்கடற்பெருக்கு உடையோன், ஆன அவனை அழித்தது அழுக்காறு என்றால் அழுக்காற்றின் வன்மை அறையுந் தரத்ததோ? எனவே அவனியில் நல் வாழ்க்கை வாழ்ந்து புகழ்பெற்றுப் பிறவிப் பயன் அடைய விழை அறிஞர்கள் திருச்செற்றுத் தீயுழியுய்க்கும் கொடிய அழுக்காற்றைக் கொள்ளாதிருப்பாராக!


ஒருவன் ஆக்கங்கண்டு அழுக்காறு ஏன் கொள்தல் வேண்டும்? தான் உயர வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம். அது கட்டாயம் இருக்க வேண்டுவது. முன்னேற்றமடைய விரும்பும் ஒவ்வொரு மனிதனும் தனது வளர்ச்சியில் நாட்டஞ் செலுத்த வேண்டுவதே. தனது வளர்ச்சியாவதென்ன? உலக வாழ்வின் பொருட்டுத் தன் உளத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/70&oldid=1309288" இலிருந்து மீள்விக்கப்பட்டது