பக்கம்:குற்றால வளம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அழுக்காறாமை

 பண்படுத்திக் கொண்டு போதலேயாகும், மற்றவர் தன்னினும் உயர்ந்த நிலையிலிருந்தால் அதைக்கண்டு பொறாமை கொள்தல் தனக்கே கேடு பயப்பதாகும். அவர் போல் ஆக முயலலாம். அவர் வளர்ச்சிக்குத் தடை செய்தல் தகாச் செயல். ஒருவரின் உயர்ந்த நேர்மை கண்டு அவர் செயலைப்பற்றி அவர்போல் ஆக முயற்சித்தல் அறச் செயல். அவர் உயர்ந்த தன்மைக்குப் பொறாமைப்பட்டால் அவர் உயர்வை எவ்வாறு வீழ்த்தலாம் என்ற எண்ணமே உள்ளத்தில் குடிகொண்டிருக்கும். அவ்வெண்ணமுள்ள மனத்தில் நல்லன வளராது; அது தேய, தீயன பெரிதும் உளத்தை ஆட் படுத்திவிடும். பிறகு அவன் செய்யும் வினையெல்லாம் கெடுவினையாகவே யிருக்கும். "கெடுவான் கேடு நினைப்பான்" என்ற மூதுரைப்படி கேடு நினைப்பவன் கெட்டுக்கொண்டே வருவான். உயர்ந்த தன்மையாளனை மற்றவனால் ஒன்றுஞ் செய்ய முடிவதில்லை. இவன் பொறாமையால் அவன் ஆக்கம் வளருமன்றித் தேயாது. இதை நாம் இன்றும் கண் கூடாகக் கண்டு வருகிறோம். அழுக்காறுடையார் அழிந்து கொண்டுதான் வருகிறார், அஃதிலார் வளர்ந்து கொண்டுதான் வருகிறார். இவ் உணர்வும் அவர்கட்குத் தோன்றுவதில்லை. மேலும் மேலும் அழுக்காறுடையார் கேடு சூழ்தலையே மேற் கொள்ளுகின்றார். அக்கேடு தம்மையே சூழ்வதை மக்கள் உணர்கின்றாரில்லை. முன்னைய அறவுரைகளையும் பண்டு அழுக்காறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/71&oldid=1309315" இலிருந்து மீள்விக்கப்பட்டது