பக்கம்:குற்றால வளம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சாமை

64



அஞ்சாமை


அச்சமென்பது பயம். அஞ்சாமை அதன் எதிர்மறை. இதற்குப் பயப்படாமை என்பது பொருள். "இவ் அஞ்சாமை கொள்ள தக்கதா? இதனால் என்ன பயன்?" என்று ஆராயலாம்.


இவ்வுலகில் மானமுள்ள வாழ்க்கை வாழ விரும்பும் மக்கள், அஞ்சாமையை ஆபரணமாகப் பூண்டாலன்றி அமையாது. அஞ்சாமை பூணும் மக்களாற்றான் ஒல்லுமாறு அறம் வளர்க்க முடியும். மறம் வளர்க்கவும் அஞ்சாமை உதவும், ஆதலின் அஞ்சாமை வேண்டாமென்று கூறல் ஆமோ? அது தவறு. மக்கள் உயிர் வாழ்வதற்குப் பெருக் துணைக் காரணமாகிய தீ, மக்கட்குப்பெருங் துன்பத்தையும் தரக் காண்கின்றோமல்லவா? அங்ஙனமே வாழ்க்கைக்கு இன்றியமையாத நீர், காற்று முதலியன மக்களை அழிப்பதையும் காணவில்லையோ? ஆதலின் அத் தீ, நீர், காற்று ஆகியவற்றை மக்கள் விலக்குகின்றனரோ? இவையின்றி இமைப்பொழுதேனும் வாழ முடியுமா? இவைகள் அழிவிற்குங் காரணமாக விருப்பதால் இவை கூடாவென நீக்கினால் நீக்கிய, கணமே இறந்து படுவதைத் தவிர வேறென்? இப்பொருள்களை மக்கள் இடைவிடாது கைக் கொண்டொழுகுகின்றனரன்றோ? இவ்வாறே அஞ்சாமையும் கொள்ளத்தக்கது. ஒருவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/73&oldid=1309329" இலிருந்து மீள்விக்கப்பட்டது