பக்கம்:குற்றால வளம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அஞ்சாமை


மைக் கொள்கைவழி கடனாற்ற வருகின்றாரில்லை. இதற்கு என்ன காரணம் என ஆராயுங்கால் அச்சமென்றே கிடைக்கின்றது. அவ்வன்பரும் இதனை ஏற்றுக்கொள்கின்றார். அது கூடாது. கடனை உணர்த்தும், அச்சத்தால், நல்லறமாகிய கடனிறுக்கத் தவறுவோர் எத்துணை அறிவு படைத்திருந்த போழ்தினும் அறியாமை யுடையவர்களென்றே அஞ்சாது கூற வேண்டியிருக்கிறது. ஏன்? அஞ்சாமை கூற வந்த நான் அஞ்சாமை கூறுமிடத்திலேயே உண்மை கூற அஞ்சுதல் ஆகாதன்றோ? அஞ்சாமையை அணியாகப் பூணுவோரே. உண்மையான அறிவு கைவரப் பெற்றவர் என்பதை நடு நிலையோடு ஆராயும் எவரும் மறுக்க மாட்டார் அஞ்சுவதேன்? எதற்காக அஞ்சுதல் வேண்டும்? அஞ்சியாவதென்? அஞ்சுவதால் விளையும் நலனென்? உயிர் அழிவற்றது; உடல் அழிவுள்ளது. அழிவற்றதைஎவராலும் அழிக்க முடியாது; அழிவுள்ளதை எவராலும் காக்க முடியாது. உறற்பால யார்க்கும் உறும். மரணத்திற்கு மேல் ஒருவனுக்கு என்ன வரும்? அதுவே வரட்டுமே! ஏன் அஞ்சுதல் வேண்டும்? அஞ்சுவதால் அதைத் தடுக்கமுடியுமோ? அது வந்து தான் தீர்கிறது. மாளா மனிதரைக் கண்டோமில்லை. எண்ணற்றார் பிறக்கின்றார்; இறக்கின்றார். அஞ்சாமை கொண்டாரும் இறந்தே போகின்றார்; அச்சங் கொண்டாரும் மாண்டழிகின்றார். மரணம் எல்லோர்க்கும் நிச்சயம். அங்ஙனமாக, ஏன் அஞ்சாமை பொருந்தும் நல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/75&oldid=1310292" இலிருந்து மீள்விக்கப்பட்டது