பக்கம்:குற்றால வளம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

67

 வாழ்க்கை வாழ்ந்து மாள்தல் ஆகாது? பேடி வாழ்க்கை வாழ்பவனும் முடிவில் மாண்டே போகிறான். வீர வாழ்க்கை வாழ்பவனும் அங்ஙனமே ஆகின்றான். அவ்வாறாக, அந்தோ! எதன் பொருட்டு மக்கள் அச்ச வாழ்க்கை பேடி வாழ்க்கை வாழ்கின்றனர்? இதனை எண்ணும்பொழுது எனக்குப் பெரு வருத்தமாக விருக்கின்றது. எவ்வறி விருந்தும் என் பயன்? இம் மெய்யறிவன்றோ வேண்டும். இம் மெய்யறிவை நன்மக்கள் பெற்றல் இன்றே அறச் செல்வி வையகத்தில் தனிப்பெருந் தாண்டவம் புரிவாளன்றோ?


ஆ! ஹா!! விரைவில் அழிவுறும் உடல் வாழ்வை நம்பியன்றோ மக்கள் உண்மை ஓராது அச்ச வாழ்க்கை வாழத் தொடங்கி விட்டனர். மக்களாய்ப் பிறந்தோர் கடன் உலகில் உள்ள மறங் களைந்து அறம் வளர்ப்பான், தொண்டு புரிதலன்றோ? அத்தொண்டின் இடையே தடுப்பவர் பொருட்டு அச்சங்கொள்தல் ஆகுமோ? அவ்வாறு கொண்டால் கடன் எங்ஙனம் நிறைவேறும்? எதற்கும் அஞ்சாது பண்டு கடனிறுத்த நமது முன்னோர்கள் காதை காம் கடனாற்ற நமக்குச் சான்றாக விருக்கின்றதன்றோ? நாம் அதனையும் மறக்கலாமா? எத்துணேயோ பல ஆண்டுகட்கு முன்னர் உயிர் வாழ்ந்த பலரைப்பற்றி நாம் இன்று பேசிப் புகழ்கின்றோம். அது எதனால்? அவர்கள் அஞ்சாமை கொண்டு தங்கடனிறுத்ததனாலன்றோ? அச்சங்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/76&oldid=1310300" இலிருந்து மீள்விக்கப்பட்டது