பக்கம்:குற்றால வளம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அஞ்சாமை



கச்சணித்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்பரூட்டுபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே,
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடித்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே,


இவைகளின் பொருளைச் சி ந் தி த் து ப் பார்க்க! அஞ்சாமை வாழ்க்கையே நல்ல வாழ்க்கை.


கேவலம் தள்ளத்தக்க அச்சத்தை அணியாய்ப்பூண்டு, மானமற்ற வாழ்க்கை வாழ்வதினும் இன்றே இறந்து படுதல் நன்று.


"மானம் படவரின் வாழாமை முன்னினிது" அன்றோ?
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்"
"இனிவரின் வாழாத மான முடையார்
ஒளிதொழு தேத்து முலகு”
"மருத்தோமற் றூனோம்பும் வாழ்க்கை
பெருந்தகைமை, பீடழிய வந்த விடத்து"
"ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்
அந்நிலையே, கெட்டா னெனப்படுதல் நன்று"


என்பன போன்ற வள்ளுவனார் வாய் மொழியை மக்கள் மறத்தலாகாது. அச்சமேலீட்டினாலேயே மக்கள் மானத்தை இழக்கின்றனர்; பிற எல்லாவற்றையும் இழக்கின்றனர். இது தவறு! தவறு!! பெருந்தவறு!!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/79&oldid=1310313" இலிருந்து மீள்விக்கப்பட்டது