பக்கம்:குற்றால வளம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

71


"மலை மிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர்-நில மிசைத், துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப் பட்டாரல்லால், எஞ்சினார் இவ்வுலகத் தில்"


இறந்து என்றேனும் படுவது திண்ணம் என்பது மறுக்க முடியா ஒன்று. இது எல்லோரும் அறிந்ததே. எனினும் மக்கள் நடை முறையில் இதனை மறந்து விடுகின்றார். இதனை மறவாது எண்ணிக் காரியங்களை ஆற்றுதல் வேண்டும். மக்கள் முதலில் கையாள வேண்டுவது மானம். அதன்பொருட்டு இந்நிலையிலா உடலைவிடச் சிறிதும் அஞ்சுதல் ஆகாது.




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/80&oldid=1304769" இலிருந்து மீள்விக்கப்பட்டது