பக்கம்:குற்றால வளம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

73

 முடைமை" என்று பொது மொழியாலேயே வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பிறபல சொற்களும் பொதுச் சொற்களாக விருந்து சிறப்பாக ஒவ்வொன்றை உணர்த்தக் காணலாம். ஒழுக்கமென்பது நல்லொழுக்கமே என்பதை வற்புறுத்த வள்ளுவனார் குறளில் நல்லொழுக்க மின்மையைக் கூறவந்த அதிகாரத்திற்குக் "கூடா ஒழுக்கம்" எனப் பெயர் தரப்பட்டிருக்கிறது. எனவே ஒழுக்கம் என்பது நல்லொழுக்கமே என்பது தேற்றம்.


"இவ் வொழுக்கத்தை வள்ளுவனாரும் பிற அறிஞரும் எவ்வாறு ஒம்பியிருக்கின்றார்? இந் நாள் உலகில் மக்களால் ஒழுக்கம் யாங்ஙனம் காக்கப் பெறுகிறது?" என்பனவற்றை நோக்குவோம். இவ்வுலகில் எல்லாவற்றையும்விடச் சிறந்ததாக மக்கள் உயிரையே மதிப்பதை யாரே யறியார்? உயிரினும் பெரிதெனப் பிறவற்றை மதிப்போர் அருமை. உயிரைத் துச்சமெனத்தள்ளி அதனிலும் உயர்ந்ததாக வேறு சில பொருள்களை மதிப்பவரே அறவோர். நமது வள்ளுவனார் "ஒழுக்கம் விழுப்பக் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்" என்றார். ஆதலால் உயிரினுஞ் சிறந்தது ஒழுக்கமெனக் கொண்டவர் வள்ளுவர் பெருமான் என்பது கிடைக்கிறது. பிற நல்லறம் வகுத்த பெரியார்களும் ஒழுக்கத்தை இவ்வாறே கூறிப் போந்திருக்கின்றார்.


மக்களாகப் பிறந்தார் சிறப்படைவது ஒழுக்கத்தினாலேயே என்பது தொன்று தொட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/82&oldid=1314522" இலிருந்து மீள்விக்கப்பட்டது