பக்கம்:குற்றால வளம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

ஒழுக்கம்

 அவ்விய நெஞ்சத்தார் ஆக்கத்தை ஏன் பெறுகிறார்? என்று கேட்கலாம். அவர்கட்கும் வள்ளுவர் விடையிறுத்திருக்கின்றார். "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வி யான் கேடும் நினைக்கப்படும்' என்றார். அவ்விய நெஞ்சத்தை புடையவன் ஆக்கம் பெற்றிருக்கிறனென்றாவது செவ்விய தன்மையுடையவன். கேடுற்றிருக்கிறானென்றாவது இருக்குமானால், அதுபற்றி ஆராய வேண்டுவதுதான் என்பது இதன் பொருள். ஆராய்வது எதனை?. அவன் பழவினையை. அவன் முன் பிறப்பின் பயனினால் இந்நிலையடைந்தா னென்பதே கருத்து. இது மறுக்க முடியாத தொன்று. இப்பிறப்பில் பொறாமை கொள்வானானால் வரும் பிறப்பில் அதன் பயனை நுகர்வானென்பது திண்ணம். மேலும் வள்ளுவனார் "அழுக்காறு கொண்டு பெரியாரானாருமில்லை. அது செய்யாது பெருக்கக் குறைவு கொண்டாருமில்லை " என்னும் பொருள்பட "அழுக்கற்றகன் றாருமில்லை அஃதிலார் பெருக்கத்திற் றீந்தாரு மில்" என்றும் பேசியிருக்கின்றார். எனவே எந்தப் பொருளினும் எவரேனும் செயலுக்கு மாறுபட்ட நிலையுற் றிருப்பாரானால் அது பண்டை வினையின் பயனே என்ற உண்மையை உணர்தல் வேண்டும். அன்றி அத் தீவினையால் அவர் அந்நிலை யுற்றாரென்று. கொள்தல் அறிவுடமையன்று. ஒழுக்கம் என்ற. இக்கட்டுரையில் அழுக்காறாமையைப் பெரிதும் பேசிவிட்டே னாதலின் எடுத்துக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/85&oldid=1314554" இலிருந்து மீள்விக்கப்பட்டது