பக்கம்:குற்றால வளம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

ஒழுக்கம்


கந்தெரிந் தோம்பித்தேரினும் அஃதேதுணை" என்றாங்கு துருவித் துருவியாயினும் இன்றி யமையாது கொள்ளத்தக்கது ஒழுக்கமே யாதலின் அதனை வருந்திக் காத்தல் வேண்டும்.


இந்நாள் ஒல்லுமாறு ஒழுக்கங் காப்பார் அரியராக விருக்கின்றனர். முன்னர்க் குறித்தவாறு ஒழுக்கம் என்பது நன்னெறியே ஒழுகிச் செல்தலேயாகும். ஒழுக்கமென்பது பிறனில் விழையாதிருத்தல் ஒன்றுமட்டுமல்ல; அல்லது வேசையில்லம் செல்லாதிருத்தல் மட்டுமல்ல. ஒழுக்கத்திற்கு முக்கியமாய்க் தள்ளக் தக்கவை இவை. ஆனாலும் இவைமட்டும் என்று கொள்தல் தவறு. இப்பொழுது இச்செயலுள்ளாரைத்தான் ஒழுக்கமில்லாரெனக் குறிப்பது வழக்கமாக விருக்கின்றது.வேசியில்லம் விழையும் ஒருவரைப் பார்த்துப் பொய் பேசும் ஒருவர் ஒழுக்கமில்லாதவரென உரைக்கின்றார். தன் செயல் ஒழுக்கமில்லாததே என்ற நினைவு அவருக்கு இருப்பதே யில்லை. பிறனில் விழைதல் வேசை வீடு தேடி ஓடியலைதல் ஒழுக்கமின்மையில் தலையாயன என்பதிற்றடை சிறிதும் இல்லை. ஆனால் பொய்பேசுதல் ஒழுக்கமுடைமையோ? ஒழுக்கமுடைமைக்குப் புறம்பான செயல்-ஒழுக்கமின்மையாகிய செயல், பலப் பல உள. அவற்றை மக்கள் நன்கு உணர்ந்து ஒழுக்கமின்மையைத் தள்ளி ஒழுக்கமுண்மையைக் கொள்தல்வேண்டும். அழுக்காறு கொள்தல், இன்னாசெய்தல்; கள்ளுண்டல், களவுசெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/87&oldid=1315821" இலிருந்து மீள்விக்கப்பட்டது