பக்கம்:குற்றால வளம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

நமது சமயம் கடவுளைப்போல உயிர்களும் நித்தியம் என்றே உரைக்கின்றது. உயிர்களில் எவ்வளவு நாட்களுக்கு முன் உண்டாவினவென் உரைக்க முடியாது. உலகம் என்று முதல் இருக்கின்றதோ-கடவுள் என்று முதல் இருக்கின்றாரோ, அன்றுமுதல் உயிர்களும் இருக்கின்றன. உலகம் என்று உண்டான்து என்றும். கடவுள் என்று தோன்றினார் என்றும் கூறமுடியாது. உலகமும் தோற்றமில்லாதது. கடவுளும் கோற்றமில்லாதவர். அதுபோல உயிர்களும் தோற்றமில்லாதன. தோற்றமில்லையென்றால் என்றும் உளது என்பது பொருள். தோற்றமில்லாததற்கு அழிவுமில்லை. சில கணிதநூல் வல்லுனர் உலகம் இவ்வளவு நாட்களுக்கு முன்பு தோன்றியது எனக் கணிக்கின்றார். சில பஞ்சாங்கங்களில் உலகம் தோன்றி நூற்றைம்பதே கோடியும் சில்லறை ஆண்டுகள் ஆயினவெனப் பொறிக்கப்பட்டுளன; இக்கூற்று அங்கீகரிக்கத் தக்கதன்று.


உயிர்கள் வினைக்கேற்பப் பிறவி பெறுகின்றன. முன் பிறப்புக்களில் செய்த நல் வினை, தீவினைக்கேற்ற உடலையும் நிலையையும் உயிர்க்ள் அடைகின்றன. இவ் உண்மை ஒர்ந்தாலன்றிக் கடவுளுக்கு நடுநிலை கூறமுடியாது. ம்று பிறப்பு இல்லையென்று இயம்புகின்ற மதங்கள் இங்கு அடிபட்டு வீழ்ந்துவிடும். மறு பிறப்பு நிச்சயமாக உண்டு. பழைய உயிர்களே புத்துடல் பெற்றுப் பிறக்கின்றன. புதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/92&oldid=1315870" இலிருந்து மீள்விக்கப்பட்டது