பக்கம்:குற்றால வளம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

வகுப்பு

 தாக உயிர்களை உண்டாக்க எவராலும் முடியாது. உயிர்களை ஆக்கவும் அழிக்கவும் யாராலும் ஆகா. தொன்றுதொட்டு உயிர்கள் அளவையில் ஒரே படித்தாகவே இருந்திருக்க முடியும். ஆனால் உலகத்தில் ஒரு காலத்தில் மக்கட்தொகை குறைவாகவும் இன்னொரு காலத்தில் அவர் எண் மிகுதியாகவும் இருக்கக் காண்கின்றோமே என்று கேட்கலாம். அஃதுண்மை, மக்கட் பிறப்பெய்தியோர் மக்கட் பிறப்பே யெய்துவதென்பதும் பிற உயிர்கள் அவ்வப் பிறப்பே எய்துவதென்பதும் இயல்பன்று. பிறப்புக்கள் வினைக்கேற்ப மாறிவரும். ஆன்மாக்களில் வேறுபாடு கிடையா. மக்கட் பகுப்பினர் அதிகமாகவிருக்கால் அதற்கேற்றபடியாக மாக்களோ தாவரங்களோ குறைவாக விருக்கும். அவர் குறைவாயின் இவை ஈடு செய்யும். உயிர்களின் அளவை ஒன்றாகவே இருக்க முடியும். உயிர்களுள் மாக்கள் உயிரென்றும், மக்கள் உயிரென்றும், தாவரங்களின் உயிரென்றும் தனித்தனியே கிடையா. பிறவிகள்தோறும் ஒருயிர் மற்றொரு உடலிலே புகல் மரபு.


ஆகவே படைப்புக்கால மென்றொன்று. கிடையாது. அது கிடையாகாகவே கடவுள் படைப்புக் காலத்தில் ஜாதி வகுத்தார் என்ற கொள்கை பொருளற்றதாகி விடுகிறது. ஜாதி என்று இப்பொழுது கூறப்படுவது உடலைப் பற்றியதாக விருக்கின்றது. இது தவறுடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/93&oldid=1319096" இலிருந்து மீள்விக்கப்பட்டது