பக்கம்:குற்றால வளம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

85

 கொள்கை. ஆன்மாக்களுள் ஜாதி பேதம் கிடையா. ஆன்மாக்களுள் பிராமணனென்றும் பிறன் என்றும் இல்லை. ஆன்மாக்களுள் ஆண் பெண் என்ற வேறுபாடுகூட இல்லை. எந்த உயிரும் எந்த உடலையும் எய்தும், வகுப்பு, கூட்டுறவு கருதி, தொழில்பற்றியும் பிறபற்றியும். மக்களால் பிரிக்கப்பட்டதே யன்றி வேறன்று. கூர்ந்து நோக்குழி வகுப்புப் பிரிவுக்கு இதைத் தவிர வேறு பொருள் கிடையாது. எல்லாமக்களும் எல்லாத் தொழிலும் செய்வதென்பது இயலாத காரியம். எனவே ஒரு தொழிலை ஒரு சாரார் செய்து வந்தனர். அவ்வாறு தொழில்செய்த முறைபற்றி அவர் அன்ன வகுப்பு இவர் இன்ன வகுப்பு என்று இயம்பப்பட்டார். தொழில்பற்றியே வகுப்புப் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. வென்பதற்குச் சில சான்று காட்டுவதுண்டு. தச்சர் என்று ஒரு வகுப்பைக் கூறுகின்றோம். "தச்தச்" என்று இழைக்கின்றமையால் அவர் தச்சர் என்ற பெயர் பெற்றார் தட்டார் என்று ஒரு பிரிவாரைச் சாற்றுகின்றோம். அவர் தங்கத்தைத் தட்டுதல் உடைமையினாலேயே அப் பெயர் பெற்றார். கொல்லர் என்றால் இரும்பைக் கொல்லுகின்றவர் என்பது பொருள். இப்படியே இன்னும் பலவகுப்புக்களையும் ஊகிக்க இடமுண்டு. குணந் தொழில்பற்றியே வகுப்புப் பிரிக்கப்பட்டதாகக் கீதையில் கண்ணபிரான் கூறியதாகவும் படிக்கின்றோம். "பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/94&oldid=1319100" இலிருந்து மீள்விக்கப்பட்டது