பக்கம்:குற்றால வளம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

வகுப்பு

 நான்குக்குமேல் ஐந்தாவது வகுப்பு இல்லை. இழிந்த காரியங்களைச் செய்தோரெல்லாம் அந் நான்கு வகுப்புக்களிலும் சேர்த்துக்கொள்ளப் படாமல் ஒதுக்கப் பட்டார். அவர் வழிவழி வந்தோர் இன்று தாழ்ந்த வகுப்பாரெனச் சாற்றப்பெறுகிறார்கள்.

பழைய நாள் வகுப்பு வகுக்குங்கால் இந் நாள் அறியாமையால் வகுப்புக்களைக் கொள்வது போலல்லாமல் பொருளொடுதான் வகுத்தார்கள். எந்தெந்தத் தொழிலை யார் யார் செய்தாரோ அவரவர் அத்தொழிலுக்குரிய வகுப்பெனச் சொல்லப்பட்டார். செந்தண்மை பூண்டு உலகிற்கு அறம் உரைத்தவரை யெல்லாம் அந்தணர் என ஒரு வகுப்பாக வகுத்தார். நாடாண்டவரை யெல்லாம் ஒரு வகுப்பாக்கி அரசனெனப் பெயர் தந்தார். பொருள் தேடுதலையே கடனாகக் கொண்டவரை ஒன்றாகக் கூட்டி வணிகர் என்றழைத்தார். ஏனைத் தொழில் செய்தோரையெல்லாம் வேளாளர் என விளம்பினார். இவருள் கடைப்பட்டு இழி தொழில் செய்தோர் ஐந்தாங் குலத்தவரென அறையப்பட்டார். இன்றும் அவருக்குள்ள பெயருண்மையே அதனை வலியுறுத்தும். புலையர் என்றால் புலைத்தொழில்செய்கின்றவர் என்பதுபொருள். இழிதொழில்செய்து வருவோரே புலையர். தீண்டத் தகாதாரென இவர் செப்பப் பட்டார். அன்று இவர் தீண்டத் தகாதாராகக் கொள்ளப்பட்டதற்குப் பொருள் உண்டு. தீண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/97&oldid=1534955" இலிருந்து மீள்விக்கப்பட்டது