பக்கம்:குற்றால வளம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

89

 டத்தக்க நிலையில் இவர் இல்லை. புலைத் தொழில் செய்து குடித்து வெறியாட்டாடும் உடல்மாசோடு கூடியவரைத் தீண்ட நல்லவர் நடுங்குவது மரபன்றோ!

இன்றும் அம்முறையில் வகுப்புக் கொள்ளப்படுமானால் ஏற்றுக் கொள்ளலாம். எவர் எத்தொழில் செய்கின்றாரோ அவர் அவ்வகுப்பைக் கொண்டால் பொருளுண்டு. அந்தணராவார் யார்? அறவோர். எதனால்? மற்றெவ் உயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான். எவரொருவர் தந்நலம் நாடாது, எதிர்கால வாழ்விற்குப் பொருள்தேடாது, உலகத்தின் பொருட்டாகவே தாம் வாழ்வதாகக் கருதி அறம்புரிந் துயர்கின்றாரோ அவரே அந்தணர். அவர் பிறப்பைப்பற்றி நோக்கவேண்டிய அவசியமே கிடையாது. அவ்வாறே நாடு புரக்கின்றவரெல்லாம் மன்னர்கள். வாணிபம் செய்கின்றவ ரெல்லாம் வணிகர்கள். வேளாண்மை புரிவோரெல்லாம் வேளாளர்கள் எவரெவர்க்கு எவ் எத்தொழிலில் அறிவும் ஆற்றலும் செல்கின்றனவோ அவ் அத் தொழிலை அவரவர் ஆற்றுவதில் தடையிருக்க வேண்டுவதில்லை. அவரவர் ஆற்றும் வினைக்கேற்ற வகுப்பை அவரவர் பெறுகின்றார் ஒரு வினை ஆற்றுவார் இன்னொரு வகுப்பின் பெயரால் அழைக்கப் பெறலாகாது. இவருள் எவரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் அல்லர்.

இம்முறையில் வகுப்புக்கொள்ளப் படுமானால் பொருள் உண்டு. இந்நாள் வகுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/98&oldid=1534956" இலிருந்து மீள்விக்கப்பட்டது