பக்கம்:குலசேகராழ்வார்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

குலசேகராழ்வார்

செலுத்துவதைப்பார்க்க ஆவலுடையவராய் இருக்கின்றார்கள். உமது தந்தையும் உமக்கு மகுடாபிஷேகஞ் செய்து களிப்படைய விரும்புகின்றனர். மறுமைக்கு ஸாதனமான முயற்சிகளை இம்மையிலேயே தேடிக்கொள்ள வேண்டும் என்று அறநூல்கள் கூறுகின்றன. இதுவரை மஹாராஜன் உலக விஷயங்களிலேயே கருத்தைச் செலுத்தவேண்டியதா யிருந்தது. இனி அவருக்கு ஒரு குறையுமில்லை. அவர் இழைத்த நோன்புகள் பலித்தன. பெறுதற் கருமையான குணவானை மகனாகப் பெற்றார். தாம் இதுவரை வஹித்துவந்த பாரத்தை பிள்ளையின் பேரில் இறக்கி முக்திக்கு ஹேதுவாகிய வழிகளில் மனத்தைச் செலுத்துதலே நேர். நாங்களும் உமக்குத் துணையாய் இருந்து மன மொழி மெய்களால் தொண்டு புரிகின்றோம். நீர் சிறிதும் மனச்சோர்வு அடைய வேண்டாம். பிதாவின் இஷ்டத்திற்கு இணங்குவதே சரியாகும்' என்று கூறித் தமது கருத்தையும் வெளியிட்டனர்.

த்ருடவாகனும் மீண்டும் தன் மகனுக்கு அறிவுறுத்தி மந்திரிகளுக்கும் ஹிதமொழி கூறினான். பின் அந் நாட்டிலுள்ள குடிகள் யாவரும் ராஜபுத்ரன் முடிபுனைந்து அரசு புரியத் தொடங்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அரசனும் தக்க பண்டிதரைக்கொண்டு நல்ல நாளொன்று பார்த்து நகர்முழுதும் அலங்கரிக்கும்படி திட்டஞ்செய்தான். புத்ரனுடைய பட்டாபிஷேகத்திற்கு வரும்படி திருமுகங்கள் அனுப்பப்பட்டன. அவ்விழாவைக் கண்டு களிக்க எண்ணிறந்த மாந்தர் பல நாடுகளிலுமிருந்து வந்து கூடினார்கள், பட்டாபிஷேக தினத்தில் குல