பக்கம்:குலசேகராழ்வார்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலசேகராழ்வார்

11


சேகரனுக்கு மறைவாணர் மந்த்ரமுழக்கத்துடன் பல்வகைத் தீர்த்தங்கொண்டு ஸ்நாநம் செய்வித்தார்கள். பின்னர் அவனை விலை உயர்ந்த பட்டாடைகளாலும் ஆபரணங்களாலும் அலங்கரிப்பித்தனர். வைதிகர் அவனுக்கு முறைப்படி மகுடம்சூட்டி ஆசீர்வதித்தனர். கூடியிருந்த அரசர்கள் ஆநந்தக்கடலில் மூழ்கிக் களித்தனர். த்ருடவரதராஜன் அடைந்த ஸந்தோஷத்திற்கு அளவேயில்லை, இந்தச் சுபதினத்தைக் கொண்டாடாதவர் கிடையாது, நகர் முழுவதும் களிப்பு மேலிட்டிருந்தது. அரசர் தத்தமக்குரிய மர்யாதைகளைப் பெற்றனர். அந்தணர் பெற்ற தானங்களுக்குக் கணக்கில்லை. நாட்டிலிருந்த ஸமஸ்த ஜனங்களும் விருந்துண்டு அரசனை வாழ்த்தினர். ஆலயங்களில் திருவிழாக்கள் சிறப்புடன் நடைபெற்றன. அஷ்டமங்கலங்களுடனும் குலசேகரனைப் பட்டத்து யானை மீதேற்றி ஊர்வலம் வந்தார்கள். பட்டாபிஷேகச் சடங்குகள் முடிந்தபின், அன்று முதல் குலசேகரனே நாட்டரசுரிமை வஹிப்பான் என்று பறையறை வித்தனர்.

தன் புதல்வன் செங்கோல் செலுத்துவதைக் காணத் தந்தை மகிழ்ந்து சிலதினங்கள் சென்ற பின் தன் மகனிடமும் மந்தரிமாரிடமும் விடைபெற்றுக் கொண்டு வனத்திற்குத் தவம்புரியச் சென்றான். அவன் சென்றபின் குலசேகரன் தந்தையின் பிரிவிற்கு மிகவும் இரங்கினான். அமைச்சர் அவனைத் தேற்றக் குலசேகரர் ஒருவாறு தம் வருத்தம் நீங்கி அரசாட்சிபுரியத் தொடங்கினார். அவரது ஆட்சியின் கீழ்நாடு முழுவதும் க்ஷேமமே தழைத்திருந்தது. சத்-