பக்கம்:குலசேகராழ்வார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

குலசேகராழ்வார்


ருக்கள் காலெடுத்துவைக்கவும் அஞ்சியிருந்தார்கள். இங்ஙனம் முடிதரித்த சில வருஷங்களுக்கப்பால் குலசேகர மஹாராஜன் ஓர் அழகியைத் தேடிக் கடிமணம் புரிந்துகொண்டார். அவர் தம் மனைவியுடன் எல்லா ஸுகங்களையும் அநுபவித்து வந்தார். நாளடைவில் அவர்களுக்கு ஒரு பெண்ணும் பிள்ளையும் பிறந்தனர். பிராட்டியே அரசனுக்குப் புதல்வியாய்ப் பிறந்தனள். குலசேகரர் அப் பெண்ணுக்கு இளை யென்றும், புத்ரனுக்கு க்ருடவ்ரதன் என்றும் பேரிட்டு வெகு சிறப்புடன் சீராட்டி வளர்த்து வந்தார்.


3. ஆழ்வாரின் விரக்திநிலை

இங்கனம் குலசேகரர் சத்ருக்களின் பயங் கொஞ்சமு மில்லாமல் செங்கோல் செலுத்திவருகையில் பரமபதத்தில் நித்யஸூரிகளுடன் நித்யவாஸம் பண்ணியருளும் பரந்தாமன், மன்னனைத் தம் அடியவராக்கி அவருக்கு நற்பதம் அளிக்கத் திருவுளங் கொண்டான். மஹாவிஷ்ணுவின் க்ருபையை அரசன் பெற்றிருந்தார். அதனால் அவருக்குப் பகவானிடத்தில் முதிர்ந்த பக்தி ஏற்பட்டுவிட்டது. அவர் தம் நாட்டிலுள்ள வித்வான்கள் எல்லாரையும் வரவழைத்து ஒரு பெரிய ஸபையைக் கூட்டினார். அந்த ஸபையில் கூடிய பண்டிதர்கள் முதற்கடவுள் யார் என்று ஆராய்ந்து, முடிவில் திருமகள் நாயகனே எல்லாத் தெய்வங்களினும் முதன்மையானவர் என்று நிச்சயித்தார்கள். அதுமுதல் அரசரும் ராஜபோகங்களை வெறுத்தார். தாம் அநுபவித்த செல்வம் நற்கதியடைதற்குப் பெரிய தடையென்று உணர்ந்தார் அரசபோகம் நிலையில்லாதது. கடவுளொருவரே அழிவில்லாத பெருஞ் செல்வம். ஆகையால் மஹா