பக்கம்:குலசேகராழ்வார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலசேகராழ்வார்

13


விஷ்ணுவின் திருவடிகளை எப்போதும் த்யாநித்து வந்தால் நல்லகதி யடைய வழியுண்டு. அதனால் அவர் ஸ்ரீரங்கநாதனையும் மற்றைய திருப்பதிகளில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமான்களையும் ஸேவிக்க விருப்பங்கொண்டார். அவர் ஸ்ரீ ராமபிரானையும் ஸ்ரீ ராஜகோபாலனையும் தமது திருமாளிகையில் விக்ரஹமாக ஆராதித்துவந்தார். அவர் விஷ்ணு பக்தர்களிடம் மிகவும் அன்பு பாராட்டிவந்தார். அவர்களுக்கு வேண்டிய த்ரவ்யம் அளித்து அவர்களை ஆதரித்துக் காப்பாற்றி வந்தார். அவர் மஹா பக்திமானாகையால் திருமாலை ஸம்ஸ்க்ருதத்தில் 'முகுந்தமாலை' என்னும் பாக்களைப் பாடித் துதித்தார். அந்த நூல் பகவானுடைய மஹிமையை அழகாய் விவரிக்கிறது. அது பக்திரஸம் நிறைந்து கேட்போர் மனம் உருகும் வகையில் அமைந்துள்ளது. முகுந்தமாலையைத் தினந்தோறும் படுக்கையை விட்டு எழுந்ததும் பாராயணம் செய்தால் நாம் கருதியதெல்லாம் கைகூடும் படி பகவான் அருள் புரிவார். அரசனாய்ப் பிறந்திருந்தும் குலசேகரர் பெரிய கல்விமானாகவும் பக்தனாகவும் விளங்கினார். அதனால் தான் அவர் உலகத்திற்குப் பக்திமார்க்கத்தைப் போதித்துப் பெருமை யடைந்த ஆழ்வார்களுள் ஒருவராய்ச் சிறப்படைந்தார்.


4. ராமாயண ஈடுபாடு

குலசேகரர் தமக்கு ஒழிந்த நேரங்களில் சிறந்த வித்வான்களை வரவழைத்து அவர்களிடமிருந்து ராமாயணம், பாரதம், பாகவதம் முதலிய மஹா கதைகளைக் கேட்டு ஆநந்தமடைவார். ஸ்ரீராமனுடைய சரித்ரத்தைக் கேட்பதென்றால் அவருக்குப்