பக்கம்:குலசேகராழ்வார்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

குலசேகராழ்வார்


ப்ரியம் அதிகம். வழக்கப்போல் ஒருநாள் ராமாயண காலக்ஷேபம் நடந்தது. சுதை சொல்பவர் ராமன் ஸீதையுடனும் தம்பி லக்ஷ்மணனுடனும் காட்டில் வாழ்ந்ததைப்பற்றிச் சொன்னார். 'ராமன் சூர்ப்பநகை யென்னும் கொடிய அரக்கியின் மூக்கையறுத்துத் துரத்தி விட்டார். அவள் உடனே கரன், தூஷணன் முதலிய கொடிய ராக்ஷஸர்களிடம் சென்று தனக்கு ராமன் செய்த அவமானத்தைச் சொல்லி முறையிட்டாள். அவர்கள் உடனே வெகு கோபங்கொண்டு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு ராமபிரானை எதிர்க்க வந்துவிட்டார்கள். என்ன செய்வார் ராமர்! தம் மனைவி ஸீதையைத் தனித்துப் பர்ணசாலையில் விட்டு வைப்பது சரி என்று எண்ணினார். ஆகையால் தம் தம்பியாரை அவளுக்குக் காவலாக வைத்து விட்டுத் தாம் ஒருவர் மட்டும் தம்மை எதிர்க்கவந்த அரக்கருடன் சண்டையிடச் சென்றார்' என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் குலசேகரருடைய மனம் துடித்தது. ஸ்ரீ ராமபிரான் அப்போதுதான் அரக்கரோடு சண்டையிடச் சென்றதாக நினைத்தார். தனித்துச் சென்ற ராமபிரானுக்கு அரக்கரால் என்ன கேடுவிளையுமோ என்று நடுங்கினார். அவருக்கு ராக்ஷஸர் பேரில் அஸாத்யமான கோபம் ஜநித்தது. அவருக்கிருந்த ராமபக்திக்கு அளவேயில்லை. அதனால் ராமாயணம் பல வர்ஷங்களுக்கு முன் நடந்த தென்பதையும் மறந்துவிட்டார். அவர் "தன் ஸேனைகளுடன் புறப்பட்டு ராமபிரானுக்கு உதவிபுரிய நிச்சயித்தார். உடனே அவர் தம் மந்திரிகளைக் கூப்-