பக்கம்:குலசேகராழ்வார்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலசேகராழ்வார்

15


பிட்டுத் தமது ஸைந்யங்களைத் திரட்டி யுத்தத்திற்குத் தயாராகும்படி கட்டளையிட்டார். மந்த்ரிகள் அரசருடைய நிலையைக் கண்டு திகிலும் அச்சமும் ஏக்கமும் அடைந்தார்கள். தமது அரசருக்குப் பைத்யம் பிடித்துவிடுமோ என்ற கலக்கம் ஏற்பட்டு விட்டது. அவரது தீர்மானத்தை எப்படி நிறுத்துவதென்று அவர்கள் ஒன்று கூடி ஆலோசித்தார்கள். முடிவில் அவர்கள் ஓர் உபாயத்தால் குலசேகரருடைய மனத்தை மாற்றிவிட்டார்கள்.

அவர்கள் செய்த சூழ்ச்சியின் படி சிலர் மன்னவர்க் கெதிரே வந்து நமஸ்கரித்து நின்றார்கள். குலசேகரரும் செய்தி யென்னவென்று வினவினார். அவர்கள் மன்னவனை நோக்கி, " ஸ்ரீ ராமபிரான் கரதூஷ ணாதியரோடு தைர்யமாய்த் தாம் ஒருவராய் யுத்தம் செய்து அவர்களை முறியடித்து வெற்றியோடு திரும்பி விட்டார். அவர் பர்ணசாலைக்கு ஜயசீவராய்த் திரும்பியதும், ஸீதாதேவியார் அவருக்கு உபசாரம் செய்து தேற்றினார். அவருக்கு இனி சத்ருக்களின் பய மில்லை" யென்று கூறினார்கள். அதைக் கேட்ட ஆழ்வாரும் களிப்படைந்தார். தாம் தீர்மானித்திருந்த ப்ரயாணத்தையும் நிறுத்தினார்.

அதுமுதல் ராமாயணஞ் சொல்பவர் ராமபிரான் வெற்றியோடு புரிந்த செயல்களை மட்டும் விரித்துக் கூறுவார். அவரடைந்த துன்பங்களைப் பற்றிக் கூறும்போது சுருக்கிக் கூறிவந்தனர். அதனால் ஆழ்வாருடைய மனமும் கலக்கமற்றிருந்தது. ராஜ கார்யங்களும் செவ்வனே நடைபெற்றன. ஒருநாள் வழக்கமாய் ப்ரஸங்கம் செய்பவர் வெளியூருக்குப்