பக்கம்:குலசேகராழ்வார்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலசேகராழ்வார்

17


ஆழ்வார் கடற்கரையை அடந்ததும் அதனை நீந்திக்கடந்து லங்காபுரிக்குச் செல்லத் தீர்மானித்தார். அவர் தைர்யத்தோடு ஜலத்தில் இறங்கிவிட்டார். அங்கிருந்த ஜனங்களுக்கு அவரைத் தடுக்குந் துணிவு பிறக்கவில்லை. ஆழ்வார் கழுத்தளவினதான நீரில் இறங்கி மேலும் செல்லத் துணிந்தார் என்ன அநர்த்தம் விளையுமோ என்று யாவரும் பயந்தனர். ஆழ்வாருடைய பக்தியைக் கொண்டாடிப் புகழ்ந்தார்கள். அவருடைய பக்தியைக்கண்டு ராமபிரானும் அவரைக் காக்கத் திருவுளங்கொண்டார். ஆபத்துக் காலத்தில் தம் பக்தர்களுக்கு அருள் புரிவதிலேயே கருத்துடைய ராமபிரான் ஸீதாதேவியோடும், தம்பி லக்ஷ்மண ரோடும் ஆழ்வாரின் எதிரில்வந்து தோன்றிக் காட்சி கொடுத்தார். தாம் ராவணனையும் மற்றும் அவனைச் சேர்ந்த அரக்கர் அனைவரையும் கொன்று ஸீதையை மீட்டு வெற்றி பெற்ற விவரத்தை எடுத்துரைத்து ஆழ்வாரை ஸாந்தப்படுத்தினார். ராமபிரானது ஸுகங்களையும் துக்கங்களையும் தம்முடையனவாகப் பாவித்த ஆழ்வாரைக் கரையேற்றி உடனே அவ்விடத்தி னின்றும் தாசரதி மறைந்து விட்டனர். இவ்வதிசயத்தைக் கண்ட தேவர்கள் ஆழ்வாரை வணங்கி மலரை ஆகாயத்தினின்றும் சொரிந்தனர். மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான ராமபிரானுடைய ஸுக துக்கங்களில் குலசேகரர் மிகவும் ஈடுபட்டிருந்தார். அதனால் ஆழ்வாருக்குப் 'பெருமாள்' என்று ஒரு பெயர் நிலைத்தது.


5. பாகவத பக்தி

குலசேகரர் தம் நகர் நோக்கித் திரும்பியபின் முன்போல் நாட்டைப் பரி பாலநஞ் செய்யும் விஷயத்தில்