பக்கம்:குலசேகராழ்வார்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலசேகராழ்வார்

19


கடமைகளைச் சரியாய்ச் செய்யவேண்டுமென்று வேதங்கள் கூறுகின்றன. நீரோ அரசர். அநேக கோடி ஜனங்களைக் காத்து அவர்களின் க்ஷேமத்திற்குப் பாடுபடும்படி கடவுள் அரசர்க்குக் கட்டளையிட்டிருக்கிறார். அக் கடமையிலிருந்து தாங்கள் தவறலாகாது. அரசனில்லாத நாடும், தாமரையில்லாப் பொய்கையும், புருஷனில்லாத பெண்களும் பெருமையடைய முடியாது. ஒரு வர்க்குரிய தொழிலை வேறொருவர் செய்வது கஷ்டம். மந்திரிகள் அரசர்க்கு ஆலோசனை சொல்வதற்கு மட்டும் உபயோகப்படுவர். அவர்கள் ஆட்சிக்கு உரியர் அல்லர். அது நாட்டில் கலஹங்களுக்கும் பலவகைத் தீமைகளுக்குமே காரணமாகும். ஆயினும் உங்களுக்குத் தெய்வபக்தி கூடாதென்பது எம் கருத்தன்று. இருந்த விடத்தில் ஸ்ரீரங்கநாதனை த்யாநித்து நற்கதியடைதலே நன்று. அன்றியும் திருமாலைப் பூஜிப்பதால் உண்டாகும் பலனைப்போல் ஆயிரமடங்கதிகமான பலனைத் திருமா லடியார்களைப் பூஜிப்பதால் ஒருவன் பெறக்கூடும். ஆகையால் நீர் கொண்டிருக்கும் எண்ணத்தை மாற்றி அடியவர்களை ஆராதித்துவந்தால் அதுவே சிறந்த புண்யமாகும்” என்று கூறி ஆழ்வாரைத் தேற்றினார்கள், குலசேகரரும் வைஷ்ணவர்கள் கூறுவது உண்டையே என்று தெளிந்தார். அவர் ஸ்ரீரங்கஞ் செல்லவேண்டுமென்னு - மெண்ணத்தை விட்டு விட்டு அதுமுதல் பாகவதர்களைத் திரட்டி அவர்களை ஆராதித்து உபசரித் தலையே மேலாகக் கொண்டார். பாகவதர்களை அன்புடன் உபசரித்து அவரிடமிருந்து சாஸ்த்ர வுண்மைகளைக் கேட்டறிந்து மகா பக்திமானாய் விளங்கினார். அவருக்குச் சிற்சில ஸமயங்களில் ஸ்ரீரங்கஞ் செல்லவேண்டு