பக்கம்:குலசேகராழ்வார்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

குலசேகராழ்வார்


மென்ற எண்ணந் தோன்றும். அச்சமயத்தில் மந்த்ரிகள் சில வைஷ்ணவர்களை அவரிடம் அனுப்புவார்கள். உடனே அவரது மனம் திரும்பிவிடும்.


6. அமைச்சரின் சூழ்ச்சி

குலசேகரருக்கு இருந்த பாகவதபக்தியைக் கேள்வியுற்றுப் பல நாடுகளிலிருந்தும் ஸ்ரீவைஷ்ணவர்கள் சேரநாடுவந்து சேர்ந்தனர். அவர்கள் அரசனது மர்யாதைகளையும் ஸந்மானங்களையும் பெற்று ஷேமமாய் வாழ்ந்து வந்தார்கள். அரசனது அபிமானத்தைப் பெற்றிருந்தமையால் அவர்களுக்கு ஒரு குறையுமில்லை. நாளடைவில் அந்நாடு முழுவதும் ஸ்ரீவைஷ்ணவர்கள் மலிந்து கிடந்தனர். இவர்களுக்கு அரசன் செய்துவந்த சிறப்புக்களைக் கண்ட அரண்மனை உத்யோகஸ்தரிற் சிலர் அழுக்காறடைந்தனர். பாகவதர்களின் பெருமையையும் செல்வாக்கையும் எப்படித் தொலைப்பதென்று யோசித்தார்கள், பொறாமை நாளுக்குநாள் வ்ருத்தியடைந்து கொண்டே வந்தது. பணமென்னும் பேய் அத் தீயோரைப் பிடித்து ஆட்டத் தொடங்கிற்று. அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களை அடியோடு ஒழிப்பதற்கு வகை தேடிக் கொண்டிருந்தார்கள். அரசனுக்குத் தெரியாமல் அவர்கள் பாகவதர்களைத் தூஷித்தும் கடுமையாக நடத்தியும் வந்தார்கள், முடிவில் அவ்வுத்யோகஸ்தர்கள், அவர்களுடைய ஹிம்ஸைகளைப் பொறுமையோடு ஸஹித்துக்கொண்டிருந்த அடியவரின் மீது அபாண்டமான பழியொன்றைச் சுமத்தி அரசரைக் கொண்டே அவரை நாட்டினின்றும் துரத்திவிடத் தீர்மானித்தார்கள்.