பக்கம்:குலசேகராழ்வார்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலசேகராழ்வார்

21


குலசேகரர் ராமபிரானிடத்தில் பக்தி மிகுந்தவர். அவர் ஸ்ரீராமர்க்குத் தினந்தோறும் பூஜை செய்வித்து வருவார். ஸ்ரீராமநவமி உத்ஸவத்தை அவர் வெகு சிறப்போடும் பாகவதர்களைக் கொண்டு நடத்தி வந்தார். ஸ்ரீராமநவமி தினத்தன்று உத்ஸவத்தின் சிறப்பை இத்தன்மையதென்று சொல்லி முடியாது. பல்லாயிரக் கணக்கான ப்ராமணர்கள் வந்து கூடினார்கள். அவர்களிடம் பகைமைகொண்டிருந்த மந்த்ரிகள் அவர்களுக்குத் தீங்குபுரிய அத்தினமே ஏற்ற தினம் என்று கொண்டனர். பெருமாளின் திருவாபரணங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியினின்றும் ஒரு விலையுயர்ந்த நவரத்ன ஹாரத்தை மந்த்ரிகள் அரசனுக்குத் தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்து விட்டார்கள். திருமஞ்ஜன காலத்தில் ப்ராமணர்கள் நகையைப் பெட்டியிற் காணாமல் நடுங்கினார்கள். அவர்கள் பயத்தோடுஞ் சென்று அரசனைக் கண்டு வணக்கமாய் நகை களவுபோன விஷயத்தை அறிவித்தார்கள், அதைக்கேட்ட அரசர் கலங்கி மந்த்ரிகளை விசாரித்தார். மந்திரிகள் தைர்யமாய் முன் வந்து, “திருவாபரணப் பெட்டியைத் தினந்தோறும் திறப்பவர் இப் பாகவதர்களே, ஆகையால் அதைப்பற்றிய விஷயம் அவர்களுக்குத் தெரியுமே யன்றி வேறெவர்க்குந் தெரியாது. நகையை அவர்களே களவாடி யிருக்கவேண்டும். அது அவர்களை விட்டு வேறெங்கும் போவதற்கு வழியில்லை. அளவுக்குமீறி அவர்களுக் கிடங்கொடுத்ததால் இக் களவு நடந்தது. அவர்களைப் பிடித்துத் தண்டித்தால் களவு தானே வெளிவரும். இல்லாவிட்டால் புலனொன்றும் ஏற்படாது. இப் பாவிகள் பாகவதர்