பக்கம்:குலசேகராழ்வார்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

குலசேகராழ்வார்


போல் வேஷம் பூண்டு நடித்து வந்து ஸமயம் நேர்ந்த போது இக் கார்யத்தைச் செய்யத் துணிந்தார்கள். சிறிதும் தயை காட்டாது நெருக்கிக் கண்டித்தே இவர்களிடமிருந்து நகையைப் பெறவேண்டும். வேறு வழியில்லை” என்று கூசாமல் மொழிந்தனர்.


7. பாம்புக் குடத்திற் கையிட்டுப் பாகவதர்

மஹிமையை அறிவித்தல்

இம் மொழிகளைக் கேட்டுக் குலசேகர மன்னன் மிகவும் கோபங்கொண்டார். அவர் கண்கள் சிவந்தன. அவர் தம் மந்திரிகளை வெகுண்டு நோக்கி, “மந்த்ரிகளே, உங்கள் பேதைமையை என்னென்று சொல்வது! களவைக் கண்டுபிடித்துக் குற்றவாளியைத் தண்டிக்கும் வகையை ஆராயாமல் பழி ஒருபக்கம் பாபம் ஒருபக்கம் என்பதுபோல் இக் குற்றத்தை பாகவதர்களின் மீது சுமத்தினீர்கள். எனக்கு இப்படிப்பட்ட ஆலோசனை சொல்லிப் புத்தி புகட்டவோ நீங்கள் ஏற்பட்டீர்கள்? உங்களைத் துணையாகக் கொண்டு நான் புரிந்து வரும் செங்கோன்மை நன்று! நன்று! கொலைத்தொழில் பாபமென் றஞ்சியே நான் உமது நாவைத் துணியாது இதுகாறும் பொறுமையுடன் இருந்தேன். இதோ பாருங்கள் ; நான் இப் பாகவதர்கள் நிரபராதிக ளென்று உங்கள் ஸந்தேஹம் தெளியும்படி காட்டுகிறேன். அவர்கள் ஒரு பாபமு மறியாத உத்தமர்களென்று நான் ஸத்யம் பண்ணுகிறேன்" என்று சொல்லி கொடிய விஷநாக மொன்றைப் பிடித்து ஒரு குடத்திலிட்டு அதைக் கொணரும்படி கட்டளையிட்டார்.

அரசனது ஆணையைக்கடக்க அஞ்சி மந்திரிகளும் நடுக்கத்தோடுஞ் சென்று ஒரு வேடனைக்கொண்டு