பக்கம்:குலசேகராழ்வார்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

குலசேகராழ்வார்


பாம்பைப் பிடித்துக் குடத்திலிட்டு ஸபையில் கொண்டுவந்து வைத்தார்கள். அரசர் அங்குக் கூடியிருந்த அமைச்சர் முதலியோரை நோக்கி, “இதோ நான் இவர்கள் நிரபராதிக ளென்று ஸத்யம் பண்ணு கிறேன். நான் சொல்வது மெய்யோ பொய்யோ என்பதை நீங்கள் அறிய விரும்புவீராயின் இதோ இருக்கும் பாம்புக் குடத்தைத் திறந்து அதில் என் கையை துழைப்பேன். நான் கூறுவது நிஜமாயின் இப் பாம்பு என்னைத் தீண்டிக் கொல்லாது. நான் சொல்வதுபோலன்றி இப்பாகவதரே இக் களவிற்குக் காரணமாயிருக்கும் பக்ஷத்தில் அது விஷத்தைக்கக்கி என் உயிரைக் கவரும்" என்று சொல்லி அக் குடத்தில் கையிட்டார். அப்போது அங்குக் கூடியிருந்தவர்க்கிருந்த பயத்தை இவ்வளவென்று சொல்ல முடியுமா? ஸத்யத்திற்குக் கட்டுப்பட்ட அரவம் ஆழ்வாருக்கு ஒரு தீங்கும் விளைக்காது அவர் கூறியது உண்மையே என்று அங்கிருந்த யாவர்க்கும் தெளிவாய்க் காட்டியது. இவ் வதிசயத்தைக் கண்ட மந்த்ரிகள் வெட்கித் தலை குனிந்தார்கள். அவர்கள் தாம் ஆராயாது செய்த பிழைக்காக இரங்கி வருத்த முற்றார்கள். அவர்கள் உடல் நடுக்கத்துடன் ஒடோடியுஞ் சென்று தாங்கள் திருடி ஒளித்துவைத்திருந்த நகையைக் கொண்டுவந்து மன்னனிடம் சேர்ப்பித்தனர். அவரது திருவடிகளில் விழுந்து பணிந்து, "அரசே, தங்களுடைய மஹிமையைச் சிறிதும் அறியாது எங்கள் மடமையால் இக் கொடுந் தொழிலைப் புரிந்து பழியைப் பார்ப்பனர் மீது சுமத்தினோம். நாங்கள் இப் பாபத்தினின்றும் உய்யும் வகை யாதென் றறியோம். என் செய்வோம்! எங்களைக் காத்துப் பொறுத் தருளல்