பக்கம்:குலசேகராழ்வார்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலசேகராழ்வார்

25


வேண்டும். எம்போலும் பாபியரும் உண்டோ ? பாகவதர்களிடம் அபசாரப்பட்ட நாங்கள் தப்புவ தெப்படி ? நாங்களே தண்டனைக் குள்ளாக வேண்டியவர்கள். இப் பாகவதோத்தமர்கள் மஹா புண்ய வான்கள். ஒரு பாபமு மறியாத நற்குண சீலர்கள்" என்று தாம் பொறாமையால் செய்த களவை ஒப்புக் கொண்டார்கள்.

இவர் உரைகேட்ட மன்னவர் அவர்களுக்காக மிகவும் வருந்தினார். சான்றோர்க் கழகு பொறுமையே யன்றோ ? ஆகையால் குலசேகரர் மந்த்ரிகளைக் கருணையோடு நோக்கி, “பகவான் இப் பாகவதர் மூலமாய் உங்களுக்குப் புத்தி புகட்டினார். ஆகையால் நீங்கள் உங்கள் ஆயுள் உள்ள வரை அவர்களை வணங்கித் தொண்டுசெய்து அவர் க்ருபைபெற்று நற்கதியடைய முயலவேண்டும். நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ச் செய்தது, அவர்களின் பெருமையை முன்னிலும் மேன்மையாக நாடெங்கும் அறிவித்தது. இப்பாகவதர்களை உபாஸித்தே பகவானது அருளுக்குப் பாத்ரராக வேண்டும். ஆகையால் நீங்கள் இனிப் பாகவதாப சாரத்திற்கு அஞ்சி நற் கர்மங்களைச் செய்து பிழையுங்கள்" என்று உபதேசித்தார். அவர்களும் அவர் மொழிப்படியே நடந்து நற்கதியடைந்தார்கள்.


8. ஸ்தல யாத்ரையும் பரமபத ப்ராப்தியும்

இவ்விதம் ஆழ்வாருடைய பெருமையும் புகழும் நாடெங்கும் பரவி எங்கும் வைஷ்ணவமதமே தழைத்தோங்கிற்று. அவர் அரச ஸுகங்களைத் துறந்து ஈச்வர தர்சனஞ் செய்ய விரும்பினார். தமது மகனான க்ருட வ்ரதன் தோள் மீது பூபாரத்தை யிறக்கி, அவனுக்கு