பக்கம்:குலசேகராழ்வார்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஶ்ரீ

குலசேகராழ்வார்

1. திருவவதாரம்

சேரநாட்டில் த்ருடவ்ரதன் என்னும் அரசன் திருவஞ்சிக்களம் என்னும் நகரை ஆண்டு வந்தான். அவன் தன் குடிகளிடத்தில் அன்பு பூண்டு எல்லா உயிர்களையும் காத்துவந்தான். அவன் தன் செல்வத்தாலும் சௌர்யத்தாலும் புகழ் அடைந்து யாவராலுங் கொண்டாடப் பட்டான். ஆயினும் அவ்வரசனுக்கு வெகுநாள் வரை புத்ரபாக்யம் இல்லாதிருந்தது. அதனால் தனக்குப்பின் அரசுரிமை பெறுவதற்கு,ஒருவருமில்லையே என்று அந்த அரசன் வருந்தினான். ஒருவன் எல்லாச் செல்வங்களையும் பெற்றும் மகப் பேறு இல்லாதிருப்பின், அது பெருங்குறையே அன்றோ? ஒருவன் பொன் படைத்திருந்தாலென்ன? புகழ் அடைந்திருந்தாலென்ன ? மக்களைப்பெற்று அவர்களை வாரியெடுத்து அணைத்து அவர் மழலை வார்த்தைகளைக்கேட்டுக் களிப்பதைப்போல் இன்பம் விளைப்பது வேறுண்டோ ? ஆதலால், மன்னனும் தனக்கு ஒரு புத்ரனை அளிக்கும்படி மஹாவிஷ்ணுவை ஆராதித்து வந்தான். அநேக ஸத்ரங்கள் கட்டிப் பலவகைத் தர்மங்கள் புரிந்துவந்தான். அவன் தன் பத்னியோடு பல நோன்புகள் இயற்றி அரிய வ்ரதங்களை அறுஷ்டித்துவந்தான். முடிவில் பகவான் அவனிடம் திருவுளம் இரங்கினார், பக்தர்களின் குறைகளை