பக்கம்:குலசேகராழ்வார்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

குலசேகராழ்வார்


அறிந்து அவரவர் வேண்டுவனவற்றை அளிக்கும் பரமனன்றோ அவர்? அவரது அருளால் அரசன் மனைவி கருத்தரித்துப் பத்துமாதங் கழிந்தபின் ஓர் அழகிய புதல்வனைப் பெற்றாள்.

மகன் பிறந்தானென்று அரசனுக்கு அறிவித்தனர். இச்சுபசெய்தியைக்கேட்ட அரசன் மிகவும் ஸந்தோஷமடைந்தான். உடனே நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களிலும் அர்ச்சனைகளும் பூஜைகளும் சிறப்புடன் நடத்தும்படி கட்டளையிட்டான்.

அந்தணர்க்கும், யாசகர்க்கும் ஏராளமான த்ரவ்யம் வழங்கினான். ஏழைகளுக்கும் அங்கஹீனர்க்கும் அன்னம் வழங்கினான். இங்ஙனம் அரசன் அநேகநாட்கள்வரை தன் நகரை அலங்கரித்துப் புத்ரோத்ஸவம் கொண்டாடினான். ஜோதிஷம்வல்ல பெரியோரை வரவழைத்து அரசன் தன் புதல்வனுடைய ஜாதகத்தைக் கணித்தான். அரசன் குலத்துக்கு அக்குழந்தை சிரோபூஷணம்போல் விளங்கிற்று. ஆகையால் பெரியோரைக்கொண்டு அம்மகவுக்குக் குலசேகரன் என்று பேரிட்டு அதை அருமையுடன் சீராட்டி வளர்த்துவந்தான். குழந்தையும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தன் பெற்றோரை மகிழ்வித்தது. குழந்தையின் ஸௌந்தர்யத்தையும் பாலலீலைகளையுங் கண்ட அரசனும் மனைவியும் மிகவும் களிப்புற்றனர்.

குலசேகரன் ஐந்து பிராயத்தை யடைந்ததும், த்ருடவ்ரதன் அப்பிள்ளைக்கு அக்ஷராப்யாசம் செய்வித்து அவனைப் பள்ளிக்கு அனுப்பினான். குலசேகரனும் சிறந்த குணவானென்றும் புத்திமானென்றும்