பக்கம்:குலசேகராழ்வார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

குலசேகராழ்வார்

மன்னவன் அதிசயித்தான், அவன் தன் தவச்செல்வனை ஒருநாள் கொலுமண்டபத்திற்கு வரவழைத்தான். தன் தந்தையின் அடிகளில் பணிந்து நின்ற சலகேரனை மன்னன் அன்புடன் நோக்கி, 'என் அருமை மகனே! எனக்கோ வயதாகிறது, இது வரை ராஜ்ய பாரத்தை வஹித்துவந்த நான் இனியேனும் கடவுளை த்யானித்து நல்வழி அடையவேண்டும். நான் வநம் சென்று தவம்புரிய விரும்புகிறேன். தந்தையின் விருப்பத்தினை முடித்துவைப்பது மைந்தன் கடமை. ஆகையால் என்னைப் போலவே நீயும் நமது நாட்டைச் செவ்வையாய் ஆளுதல் வேண்டும். எனக்கு உதவியாய் இருந்துவந்த மந்த்ரிகள் உனக்குந் துணை நிற்பார்கள். மதியூஹிகளான மந்த்ரிகளின் ஆலோசனையைக் கேட்டு மநுமுறை தவறாமல் அரசுபுரிவதே செங்கோன்மையாகும். குடிகளின் குறைகளை அறிந்து அவர்களுக்கு நலம்புரிவது மன்னவன் கடமை. அவர்களைச் சார்ந்த இன்பமும் துன்பமும் அரசனைச்சேரும். ஆகையால் குடிகளுக்கு ஒருவிதத்திலும் குறை நேராதபடி ஆதரிப்பது வேந்தன் பொறுப்பு. தெய்வத்திற்கு அஞ்சி நீ செங்கோல் செலுத்திவந்தால் புகழும் பெருமையும் அடைவாய். ஏழைகளையும், திக்கற்றவர்களையும், ப்ராமணர்களையும், ஸ்திரீகளையும், பசுக்களையும் கை விடாதே. உயிர் போவதாயிருந்தாலும் நன்னெறியினின்றும் விலகாதே. என் குலக்கொழுந்தே, நான் உனக்கு ஒன்றுங் கூறவேண்டியதில்லை. உன் நிறைந்த குணத்தையும் அறிவையும் திறத்தையும் பெரியோர்புகழக் கேட்டிருக்கிறேன். நீயும் அரசுரிமை வஹிக்கும் பர்வம் அடைந்திருக்கிறாய். அந்தந்தக் காலங்களில் செய்ய வேண்டிய கடமைகளைக் கைவிடுதல் முறையன்று