பக்கம்:குலசேகராழ்வார்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலசேகராழ்வார்

9

என்று பலவகையாக உபதேசித்துத் தன் கருத்தை வெளியிட்டான்.

அரசன் கூறிய உரைகளைக் கேட்டுப் புத்ரன் அதிக வருத்தத்தை படைந்தான். அவன் தன் பிதாவை நோக்கி, “தந்தையே, நீங்கள் கூறியதைக் கேட்டு என் மனம் பதறுகிறது, புலியிருந்து ஆண்ட காட்டினை நரி ஆள்வதோ? நான் எங்கனம் இவ் அரசை வஹிப்பது ? பெரிய ராஜ்யத்தைக் கட்டி யாள்வது எளிதோ? அறியாமையை யுடைய நானோ இப் பெருஞ் சுமையைத் தாங்கவல்லவன் ? அறிவு, ஆண்மை, மதிநலம், நடுநிலை முதலிய அருங் குணங்கள் வாய்ந்த தங்களைப்போன்ற பெரியவர்களுக்கே நீதி தவறாமல் அரசுபுரிவது அருமையாயிற்றே! அப்படியிருக்க எளியேனாகிய நானோ அத்திறமை வாய்ந்தவன் ? அன்றியும் தங்களை விட்டுப் பிரிந்திருக்க என்னால் கூடுமோ? தங்கள் பிரிவினை இந்நாட்டுக் குடிகள் எப்படித் தரிப்பர் ? நாட்டில் அராஜரிகமும் கொடுங் கோன்மையும் அன்றோ தலையெடுத்து நிற்கும் ? ஆகையால் தாங்கள் இன்னுஞ் சிலகாலம் நாட்டைவிட்டு அகலாதிருக்க வேண்டுகிறேன்" என்று குறையிரந்து நின்றான்.

அரசனது க்ஷேமத்தில் நாட்டம் மிகுதியும் உடைய அமைச்சர்கள் குலசேகரனைத்தேற்றி, அவனை நோக்கி, “இளவரசே, தந்தையார் கூறியது அனைத்தும் அநுபவத்தை ஒட்டியதே யாகும். உமது பெருமையை நீர் அறியமாட்டீர். எவ்விதத்திலும் நீர் உமது தந்தைக்குக் குறைந்தவர் அல்லர். அவருடைய ஆட்சியின் கீழ் ஸுகமாய் வாழ்ந்திருந்த குடிகள் நீர் அரசு